India

“GDP 9.6% மட்டுமே இருக்கும்; மோடி ஆட்சியில் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடையும்” : எச்சரிக்கும் ‘மூடிஸ்’ !

மோடி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து கடுமையான பொருளாதாரச் சரிவை இந்தியா சந்தித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்கிகளும் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

வங்கியில் கடன் வாங்கியவர்கள் திருப்பி அளிக்காமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடியதன் விளைவாக வங்கிகள் முடங்கும் அவல நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் மட்டுமே.

இதில் நாளுக்கு நாள் பங்குச் சந்தைகளும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அதன் காரணமாக முதலீட்டாளர்கள் ஒரே நாளில் 7.72 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்தித்துள்ளனர். இந்நிலையில் இந்தியப் பொருளாதாரம் 2021ஆம் ஆண்டில் 13.9 சதவிகித வளர்ச்சியைச் சந்திக்கும் என்று கூறியிருந்தது. ஆனால், அதனை தற்போது 9.6 சதவிகிதம் என்று குறைத்துள்ளது.

2020-இல் கொரோனா முதல் அலையின் போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதி - இறக்குமதி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. இந்தியப் பொருளாதாரமும் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வந்ததால் இந்தியப் பொருளாதாரமும் சற்று வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியது. 2020-21 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 0.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஆனால், கொரோனா 2-ஆவது அலை ஏற்படுத்திய பாதிப்பால், ‘மூடிஸ்’ நிறுவனம் முன்பு கணித்திருந்த 13.9 சதவிகித வளர்ச்சி சாத்தியமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் - ஜூன் மாதங்களில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு பொருளாதார வளர்ச்சி மீதான நம்பிக்கையைக் குறைந்துள்ளது என்று ‘மூடீஸ்’ தெரிவித்துள்ளது.

Also Read: ATM கொள்ளை.. இருவர் கைது.. “30 பேர் சேர்ந்து கொள்ளையடிப்போம்” - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!