India

இயற்பியல், கணிதம் படிக்காதவர்களுக்கு பொறியியல் சீட்? கல்வி தரத்தை குறைக்க திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசு?

+2 பாடதிட்டத்தில் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்துப்படித்திருக்க வேண்டும் என்பது பொறியல் படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதியாக இருந்து வருகிறது. இதனை மாற்ற ஒன்றிய அரசு கடந்த 11 ஆம் தேதி ஆலோசனை நடத்தியுள்ளது.

நிதி ஆயோக் தலைவர் ராஜிவ்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அகில இந்திய தொழில்நுட்ப குழு தலைவர், நிதி ஆயோக், கல்வி துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒன்றிய அரசின் புதிய திட்டத்துக்கு கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினரும், அறிவியலாளருமான வி.கே.சரஸ்வத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய பொறியியல் கல்வியின் தரத்தை இது குறைத்துவிடும் என்று எச்சரித்துள்ளார். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த அகில இந்திய தொழில்நுட்ப குழு தீவிரமாக ஆலோசித்துவருவதாக கூறப்படுகிறது.

இதற்கு கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது காலியாகக் கிடக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளை நிரப்பும் முயற்சி. பொறியியல் கல்வியின் தரத்தை இது பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

Also Read: “போலி வலைதளம் உருவாக்கி நன்கொடை வசூலித்த கும்பல்கள்” : புதிது புதிதாக வெளியாகும் ‘ராமர் கோயில்’ ஊழல்கள்!