India
நாம் விழித்துக்கொண்டால் எத்தனை கொரோனா அலை வந்தாலும் காணாமல் போய்விடும் - தினகரன் தலையங்கம்!
கொரோனா இரண்டாவது அலையில் இருந்து தமிழ்நாடு உட்பட இந்தியா மீண்டும் உயிர் பெற்று வருகிறது எனக் குறிப்பிட்டு தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை துவங்கியது. படிப்படியாக அதிகரிக்க தொடங்கி, செப்டம்பரில் உச்சம் தொட்டு, அதன் பிறகு பெரிதும் குறைந்தது. இனிமேல் நோய் தொற்று இருக்காது என மத்திய, மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்தன. மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனால், கொரோனா வைரஸ் பல்வேறு விதமாக உருமாறி, வீரியத்தை அதிகப்படுத்திக் கொண்டது. இதன் காரணமாக, இரண்டாவது அலை பரவத் துவங்கியது.
இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கவே பதற்றம் தொற்றிக் கொண்டது. முன்பு, நோய்க்கான அறிகுறியே இல்லாமல் இருந்தவர்கள் அதிகம். கிட்டத்தட்ட 80 சதவீதம் பேருக்கு நோய்க்கான அறிகுறியே இல்லை. ஆனால், இரண்டாவது அலையில், நோய் அறிகுறிகளுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. முன்பெல்லாம் இந்நோய் தாக்கி, உச்ச நிலையை அடைய ஏழு -எட்டு நாட்கள் ஆனது. ஆனால், இப்போது 4-5 நாட்களிலேயே அந்த நிலையை அடைந்துவிட்டது.
கடந்த முறை குழந்தைகள், இளைஞர்களை கொரோனா தொற்று பாதிக்கவில்லை. ஆனால், இம்முறை அதுமிக வும் அதிகரித்தது.குடும்பத்தில் ஒரு வரைகொரோனா தொற்றுதாக்கினால், மற்றஅனைவரையும் மிகஎளிதாக தாக்கும்நிலை ஏற்பட்டது. மருத்துவமனைகளும், சவக்கிடங்குகளும் நிரம்பி வழியும் அளவுக்கு நிலைமை விபரீதமானது. இந்நோய் தாக்கத்தின் தீவிரத்தைஉணர்ந்து தமிழகஅரசு, முழு ஊரடங்கு அமல்படுத்திய பிறகே நோய் தொற்று வேகம் சரியத்து வங்கியது. கடும் ஊரடங்கு, தொடர்ச்சியான தடுப்பூசி முகாம் என நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது.
Also Read: 10 ஆயிரத்திற்கும் கீழே குறைந்த தினசரி கொரோனா தொற்று... அரசின் தொடர் முயற்சியால் நல்ல முன்னேற்றம்!
அரசின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. கடந்த மே மாதம் இருந்த பாதிப்பின் உச்சத்தை விட தற்போது நான்கில் ஒரு பங்கு நோய் பரவல் குறைந்துள்ளது. இது, ஒன்றரை மாதத்திற்கு பிறகு நடக்கும் விஷயமாகும். நாடு முழுவதும், கடந்த மே 8ம் தேதி தினசரி பாதிப்பு 3.9 லட்சமாக இருந்தது. இது, தற்போது 80 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. இரண்டாவது அலை எவ்வளவு வேகமாக உச்சம் தொட்டதோ, அதே வேகத்தில் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது, மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனாலும், கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்னும் நிலைமை சீராகவில்லை.
அடுத்து, மூன்றாவது அலை வரும், அது குழந்தைகளை தாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அரசின் கடும் உத்தரவுகளை எதிர்கொள்ளாமல், ஒவ்வொரு தனி மனிதனும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக கையாண்டால் கொரோனா விலகும். நாம் நன்கு விழித்துக் கொண்டால், கொரோனா எத்தனை அலை உருவெடுத்தாலும், அது காணாமல் போய்விடும்.
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!