India
“ஒதுக்கப்பட்டது 35,000 கோடி; செலவிட்டது 8076 கோடி”: தடுப்பூசி வாங்குவதில் மோசடியில் ஈடுபட்ட ஒன்றிய அரசு!
இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை ஒன்றிய அரசு அதிகமாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காததன் விளைவு, நாடுமுழுவதும் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒன்றிய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி ரூபாயில், இதுவரை 8,067 கோடி ரூபாய்க்கு மட்டுமே தடுப்பூசி வாங்க செலவிடப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
டோஸ் ஒன்றுக்கு ஜி.எஸ்.டி வரி உள்பட 157 ரூபாய் 50 காசுகளுக்கு ஒன்றிய அரசு தடுப்பூசியை வாங்கி வருகிறது. அதன்படி 21 கோடி கோவிஷீல்டு தடுப்பூசியும், 7.5 கோடி கோவாக்சின் தடுப்பூசியும் வாங்க 4,488 கோடி ரூபாய் செல்விடப்பட்டுள்ளது.
மேலும், 25 கோடி கோவிஷீல்டு மற்றும் 19 கோடி கோவாக்சின் வாங்க 30% முன்பணமாக 2,079 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிற மூன்றாம் கட்ட ஆய்வில் உள்ள பயாலஜிகல்-இ தடுப்பூசி 30 கோடி டோஸ் வாங்க 1500 கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தமாக 102.5 கோடி டோஸ் தடுப்பூசி வாங்க இதுவரை 8067 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு சுகாதாரத்துறை அளித்துள்ள பதில் மூலம் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
மேலும் சமீபத்தில் தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட நிதிகுறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய பிறகு, தடுப்பூசிக்கான புதிய கொள்கையை மோடி அரசு வகுத்துள்ளது. நாட்டிலுள்ள 18 வயதைக் கடந்த அனைவருக்கும் ஒன்றிய அரசே இலவசமாக தடுப்பூசியை செலுத்த உள்ளது என்றும், தடுப்பூசிகளை ஒன்றிய அரசே 75 சதவிகிதம் கொள்முதல் செய்கிறது என்றும், தடுப்பூசிகளை ஒன்றிய அரசே மாநிலங்களுக்கு இலவசமாக தரும் என்றும் வரும் 21 முதல் தடுப்பூசி தரப்படும் என்றும், மேலும் 3 தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் பிரதமர் சொல்லி இருக்கிறார்.
இந்நிலையில் தடுப்பூசி வாங்க ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி ரூபாயில் 8,067 கோடிக்கு மட்டும் ஒன்றிய அரசு தடுப்பூசி வாங்கியுள்ளது சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !