India
‘மிஸ்டர் மங்கி பாத் பிரதமரே... என் கதையை முடிக்கப் பார்க்கிறீர்களா?’ : கொதித்தெழுந்த தீதி மம்தா !
மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றியடை முடியாத ஆத்திரத்தில் அம்மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் போக்கை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு பிரதமர் மோடி வந்திருந்தார். அவர் ஆய்வு செய்து முடித்தபின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக்கூட்டத்திற்கு முதல்வரின் அனுமதியின்றி பா.ஜ.கவைச் சேர்ந்த சுவேந்து அழைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்காமல் தனியாக பிரதமரை 15 நிமிடங்கள் மட்டும் சந்தித்து பேசி விட்டு, ஆலோசனைக் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய அரசு, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் பந்த்யோபத்யாவை டெல்லி பணிக்குத் திரும்ப வரக்கூறி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், தலைமைச் செயலாளரை அனுப்ப மறுத்த முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு இன்று 5 பக்க அளவில் கடிதம் எழுதி, முடிவை திரும்பப் பெறக் கோரியிருந்தார்.
அதுமட்டுமல்லாது, தலைமைச் செயலாளர் பந்த்யோபத்யா இன்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில், அவரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதல்வரின் ஆலோசகராக நியமித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பை அழிக்க முயல்கிறார்கள். அவர்களால் சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால், மாநில அரசுக்கு தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்.
அவர்களால் சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தலைமைச் செயலாளரைத் திரும்ப அழைக்கும் முடிவு என்பது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் செயல். அவர்களின் நோக்கம் மம்தா பானர்ஜி மட்டும்தான். அதுமட்டுமல்லாது, மாநில அரசின் அனுமதியின்றி குடிமைப்பணி அதிகாரியை மத்திய அரசுப் பணிக்கு மாற்ற முடியாது.
“மிஸ்டர் பிரைம் மினிஸ்டர், மிஸ்டர் பிசி பிரைம் மினிஸ்டர், மிஸ்டர் மன் கி பாத் பிரைம் மினிஸ்டர் உங்களுக்கு என்ன வேண்டும்?
நீங்கள் என் கதையை முடிக்க நினைக்கிறீர்களா? உங்களால் அது முடியும் என நினைக்கிறீர்களா? அது; எப்போதும் முடியாது, என்றும் நடக்காது!
மக்கள் ஆதரவும், அரவணைப்பும் எனக்கு இருக்கும்வரை அது (உங்களால்) முடியாத ஒன்று!
நான் அனைத்து மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.... இந்த நாட்டின் எல்லா அரசியல் கட்சிகளுக்கும், மூத்த முன்னோடி அரசியல் தலைவர்களுக்கும், அரசுசார்ந்த, சாராத பணியாளர்களுக்கும், எல்லா முன்னணித் தலைவர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும், மாநில முதலமைச்சர்களுக்கும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கும், நான் விடுக்கும் வேண்டுகோள், “தயவுசெய்து எல்லோரும் இணைந்து நின்று செயல்படுவோம். ஒன்றுபடுங்கள். அனைவரும் சேர்ந்து இதில் போரிடுங்கள்.
தலைமைச் செயலாளருக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் இன்றுடன் ஓய்வு பெற்றுவிட்டார். அவர் அடுத்த 3 ஆண்டுகள் முதல்வரின் தனிப்பட்ட ஆலோசகராகச் செயல்படுவார். தலைமைச் செயலாளர் நாளை டெல்லிக்கு வர வேண்டும் என அவருக்குத்தான் கடிதம் அனுப்பப்பட்டது.
இது நான் அனுப்பிய கடிதத்துக்கான பதில் அல்ல. தலைமைச் செயலாளருக்கான கடிதம். மத்திய அரசுக்கு நான் இன்று அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை எனக்கு பதில் கிடைக்கவில்லை. தலைமைச் செயலாளரை டெல்லிக்கு அனுப்ப முடியாது. அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அடுத்த புதிய தலைமைச் செயலாளராக ஹெச்கே. துவிதேவி பொறுப்பேற்பார். அவரின் இடத்துக்கு பி.பி கோபாலிகா நியமிக்கப்பட்டுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?