India
ஒன்றிய அரசுதான் தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும்: கொள்கை முடிவு எடுக்காதது ஏன்?
தடுப்பூசி விவகாரத்தில் இன்னும் கொள்கை திட்டம் வகுக்காதது ஏன்.? மாநில அரசுகள் அவர்களாகவே சமாளித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடத் திட்டமா என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று வழக்கு நீதிபதி சந்திரசூடு தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் மத்திய அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். மேலும், தடுப்பூசிக்கு பல விலைகள் நிர்ணயித்துள்ளது ஏன்? மத்திய அரசு குறைந்த விலைக்கு வாக்கும் போது மாநிலங்களுக்கு மட்டும் அதிக விலை நிர்ணயித்திருப்பது ஏன்? மாநிலங்கள் அவர்களாகவே சமாளித்துக் கொள்ளட்டும் என்று மத்திய அரசு விட்டுவிடப் போகிறதா? என்று கேள்வி எழுப்பியது.
பல மாநிலங்கள் அடங்கிய ஒன்றியம்தான் இந்தியா என்று அரசியல் சாசனம் சொல்கிறது. அப்படியிருக்கும் போது கூட்டாட்சி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஒன்றிய அரசுதான் தடுப்பூசியை வாங்கி மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். உடனே ஒரு தடுப்புசிக் கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும். அதனை மானிலங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது பதிலளித்த சோலிசிட்டர் ஜெனரல் பைசர் உள்ளிட்ட அனைத்து தடுப்பூசி நிறுவனங்களிடமும் பேசி வருவதாகவும், இப்போது உறுதியாக எதனையும் தெரிவிக்க இயலாது என்று தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ஆயிரம் ரூ வசூலிக்கப்படுகிறது. 4 பேர் அடங்கிய குடும்பத்துக்கு நாலாயிரம் செலவாகிறது என்று மனுதாரர் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அரசு தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்யாவிட்டால் தட்டுப்பாடு வரும் போது 2000 ரூ வரை கூட வசூலிக்கப்படலாம் என்று அச்சம் தெரிவித்தனர். ரெம்டெசிவிர் பற்றாக்குறை நிலவிய போது அதன் விலை உச்சத்துக்குச் சென்றதையும் அப்போது நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!