India

கொரோனாவை சாதகமாக்கி மீண்டும் CAA-ஐ கையிலெடுத்த ஒன்றிய அரசு: 5 மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்த திட்டம்!

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சட்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 13 மாவட்டங்களில் முதல்கட்டமாக இந்த கணக்கெடுப்பை நடத்ததும் படி அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், கிருஸ்தவர்கள், ஜைன மதத்தினர், பார்சி ஆகியோர் குறித்த கணக்குகளை சேகரிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

2019 குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டாலும் கடும் எதிர்ப்பு போராட்டங்கள், அதனைத் தொடர்ந்து டெல்லியில் வெடித்த வன்முறை, 5 மாநில தேர்தல்கள் இதன் காரணமாக காரணங்களால் அதனை செயல்படுத்தாமல் ஒன்றிய அரசு இருந்தது. அதற்கான விதிமுறைகளும் வகுத்து வெளியிடவில்லை. எனவே 2009 குடியுரிமை விதிமுறைகளின்படி கணக்கெடுப்பு நடத்தும்படி கூறப்பட்டுள்ளது.

கொரோனா முடியும் வரை சட்டம் அமல்படுத்த மாட்டாது என்று தேர்தல் பிரச்சாரங்களின் போது உள்துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆனால், தற்போது கொரொனா இரண்டாவது அலையில் மக்கள் சிக்கித் தவிப்பதை சாதகமாகப் பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தை செயல்படுத்த ஒன்றிய துடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.