India

“கொரோனா பேரிடரிலும் அநாகரிகமாக நடந்து கொள்ளும் யோகி அரசு”: உ.பி-யில் 16 மருத்துவர்கள் கூண்டோடு ராஜினாமா!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரகண்ட், கேரளா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்கள் கொரோனா தொற்றால் கடுமையான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அம்மாநில மக்கள் சந்தித்து வருகின்றன.

இதிலும், உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து வரும் தகவல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. கங்கை நதியில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் சடலங்கள் மிதந்த சதம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் யோகி ஆதித்யநாத் யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், ஆரம்ப மற்றும் சுகாதார மையங்களில் பணியாற்றி வந்த 16 மருத்துவர்கள் கூட்டாக ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவர்கள் அளித்த ராஜினமா கடிதத்தில், தொற்றுநோய் கடமைகளின் போது மருத்துவர்களாகிய நாங்கள் பொறுப்புகளை முழு பொறுப்புடன் நிறைவேற்றினாலும், நிர்வாக அதிகாரிகள் சர்வாதிகார அணுகுமுறையை கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பாக, எந்த விளக்கமும் கேட்காமல் மேலதிகாரிகள் தண்டனை உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர்.

மேலும் அவர்களின் அநாகரிகமான நடத்தை மற்றும் ஒத்துழைpபு அளிக்காமல் தங்களை தொடர்ந்து பணி செய்யவிடாமல் தடுக்கிறார்கள். அவர்களால் நாங்கள் நடத்தப்படும் விதம் எங்களை அதிருப்திக்குள்ளாக்கியிருகிறது. எனவே தங்களின் பணியை ராஜினாமா செய்வதாக அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

Also Read: தமிழகத்திலும் தடுப்பூசிகள் தயாரிக்கலாம் : வழிமுறைகளை சுட்டிக்காட்டி மோடி அரசுக்கு தி.மு.க MP கடிதம்!