India
கொத்து கொத்தாக மடியும் மக்கள்; மூட நம்பிக்கையை வளர்க்கும் பாஜக - சர்ச்சையை கிளப்பிய ம.பி. பெண் அமைச்சர்!
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் இந்தியா பேரழிவைச் சந்தித்து வருகிறது. இதுவரை 2,33,40,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,54,197 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்னும் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராமல் அதன் கோரதாண்டவத்தை காட்டி வருகிறது.
இப்படி நாடே இக்கட்டான நிலையில் இருக்கும் போது, கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ளக் கோமியம் குடியுங்கள், மாட்டுச் சாண குளியல் எடுங்கள், யாகம் நடத்துங்கள் என அறிவியலுக்குப் புறம்பாக பா.ஜ.க தலைவர்கள் பேசி வருகின்றனர்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தே சுகாதார வசதிகளை மேம்படுத்தாமல், கொரோனா ஒழிய வேண்டும் என யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார். தற்போது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சரும் கொரோனா மூன்றாவது அலை வராமல் இருக்க யாகம் நடத்துங்கள் என பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்தூரில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ மையத்தை அமைச்சர் உஷா தாக்கூர் திறந்து வைத்து பேசுகையில், "கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வராமல் இருக்க யாகங்களை 4 நாட்களுக்கு நடத்துங்கள். இது யக்ஞ சிகிச்சை ஆகும். ஆதி காலங்களில் நம் மூதாதையர்கள் பெருந்தொற்றுக்களை ஒழிக்க யாகங்களை நடத்தினர்." என பேசியுள்ளார்.
முன்னதாக இந்தூர் விமான நிலையத்தில் உள்ள சிலைக்கு முன்பு உஷா தாக்கூர் சடங்குகள் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் கொரோனா சிகிச்சை மையத்துக்கு இவர் முகக்கவசம் அணியாமல் சென்றது சமூக ஊடகங்களில் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியதும் கூடுதல் தகவல்.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!