India

பசுக்களை காத்து மக்களை கைவிட்ட யோகி அரசு: கொரோனாவுக்கு 11 எம்.எல்.ஏக்கள் பலி ; உ.பியில் தொடரும் அவலம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் 4 லட்சத்திற்கு மேல் கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் படுக்கை, ஆக்சிஜன் வசதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களான உத்திர பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா நடவடிக்கையில் உரிய முறையில் அரசு செயல்படாததால் கொரோனா நோயாளிகள் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

உத்திர பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜனுக்கும், படுக்கைக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகள் என்ன செய்வது தெரியாமல் திணறி வருகின்றனர். ஆனால் மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிடாமல் பசு மாடுகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

யோகியின் மோசமான ஆட்சியால் கொரோனாவிற்கு மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். மேலும் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா தொற்றுக்குப் பலியாகி வருகின்றனர்.

உத்திர பிரதேச மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 11 எம்.எல்.ஏகள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் பா.ஜ.க மற்றும் சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள்.

கொரோனா முதல் பரவலின் போது, 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்எல்ஏ.க்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது கடந்த 15 நாட்களில் மட்டும் பா.ஜ.கவை சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் கொரோ தொற்றல் உயிரிழந்துள்ளனர்.மேலும், பாஜக.வை சேர்ந்த வீரேந்திரா சிங், லோகேந்திரா சிங் ஆகியோர் விபத்து மற்றும் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் உத்திரபிரசேத்தில் இறந்த 13 எம்எல்ஏ.க்களின் இடங்கள் காலியாகவே உள்ளன. இந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் 3 மாதங்களில் நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடத்துவது ஆபத்தானது.

மேலும், உ.பி.யின் 18-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 2022-ல் நடைபெற உள்ளது. எனவே, 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படுவது சந்தேகமே என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: “காயத்ரி மந்திரம் கொரோனா தொற்றை குணப்படுத்துமா?” : ஆய்வுக்கு நிதி ஒதுக்கிய மோடி - அதிர்ச்சியில் மக்கள்!