India
மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்.. “தடுப்பூசி வாங்க ஏன் 30 ஆயிரம் கோடி ஒதுக்கக்கூடாது?” : மம்தா கேள்வி!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. தினந்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்திற்கு மேல் பதிவாகிவருறது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பா.ஜக ஆளும் மாநிலங்களான உத்தர பிரசேதம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுகாதாதார கட்டமைப்பு மிகவும் மோசமடைந்துள்ளதால் கொரோனா நோயாளிகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.
இப்படி இந்தியாவே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய பா.ஜ.க அரசு மக்களைக் காப்பாற்றாமல், புதிய நாடாளுமன்றம் கட்டுவதிலும், பிரதமருக்கு புதிய இல்லம் கட்டுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் மடிந்து கொண்டிருக்கும்போது 20 ஆயிரம் கோடி மதிப்பில் எதற்கு புதிய நாடாளுமன்ற கட்டிடம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மம்தா பானர்ஜி, நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் சிலைகள் அமைக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும் மத்திய அரசு, தடுப்பூசி வாங்க ஏன் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாடாளுமன்றம் கட்டிடம், சிலைகள் அமைக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடும் மத்திய அரசு, கொரோனாவால் மக்களின் உயிர் பறிபோகும் இந்த கடினமான சூழ்நிலையில், தடுப்பூசி வாங்க ஏன் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கக்கூடாது.
மேற்கு வங்க மாநிலத்திற்கு இலவச தடுப்பூசி வழங்க நான் பிரதமர் மோடிக்கு விடுத்த கோரிக்கை மீது இதுவரை எந்தவொரு பதிலும் வரவில்லை. பி.எம்.கேர்ஸ் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட பணம் எங்கே போனது? மக்களின் உயிரோடு ஏன் விளையாடுகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!