India

புதுச்சேரி மாநில தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க-0 தி.மு.க-6 : 30 தொகுதிகளின் முழுவிவரம்!

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி காலையில் இருந்து எண்ணப்பட்டு தற்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பா.ஜ.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேபோல, காங்கிரஸ் தலைமையில் தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

இந்நிலையில் காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பா.ஜ.க 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பெற்றி பெற்ற 10 இடங்கள்:

1.மங்கலம் - தேனீ ஜெயக்குமார்

2.கதிர்காமம் - ரமேஷ்

3.ஏம்பலம் - லட்சுமிகாந்தன்

4.நெடுங்காடு - சந்திர பிரியங்கா

5.காரை வடக்கு - திருமுருகன்

6.நெட்டப்பாக்கம் - ராஜவேலு

7.அரியாங்குப்பம் - பாஸ்கர்

8.இந்திரா நகர்- ஆறுமுகம்

9.தட்டாஞ்சாவடி- ரங்கசாமி

10.ராஜ்பவன்- லட்சுமிநாராயணன்.

6 தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.க

1.மண்ணாடிப்பட்டு - நமச்சிவாயம்

2.காமராஜ் நகர் - ஜான்குமார்

3.நெல்லித்தோப்பு - விவியன் ரிச்சர்டு

4.மணவெலி - செல்வம்

6. ஊசுடு - சாய் சரவணன்

தி.மு.க. வெற்றி பெற்ற ஆறு தொகுதிகள்:

1.உப்பளம் - அனிபால் கென்னடி

2.வில்லியனூர் - சிவா

3.காரை தெற்கு - நாஜிம்

4.முதலியார்பேட்டை- சம்பத்

5.பாகூர் - செந்தில்குமார்

6.நிரவி- நாக.தியாகராஜன்

6 தொகுதிகளில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள்

1.உருளையன்பேட்டை - நேரு

2.திருபுவனை - அங்காளன்

3.முத்தியால்பேட்டை- பிரகாஷ்குமார்.

4.திருநள்ளாறு - P.R.சிவா

5.ஏனாம் - கொல்லப்பள்ஸ்ரீநிவாச அசோக்

6.உழவர்கரை - சுயே சிவசங்கரன்

2 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ்

1.மாகி-ரமேஷ் பரம்பத்

2.லாஸ்பேட்டை-வைத்தியநாதன்

அதேபோல் புதுச்சேரியில் போட்டியிட்ட அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “குடிசை வீட்டில் இருந்து கோட்டைக்குப் போகும் தோழர் மாரிமுத்து” : ட்விட்டரில் கொண்டாடும் நெட்டிசன்கள்!