India

பா.ஜ.க.,வுக்கு இருந்த ஒரு இடத்தையும் பிடுங்கிக்கொண்டு துரத்தி விட்ட சகாவு பினராயி விஜயன்! #WashoutBJP

கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி இன்று காலையில் இருந்து துவங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கேரளாவில் இடது ஜனநாயக கூட்டணி 92 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 45 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தர்மதம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் 41873 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல் மட்டனூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கே.வி.சைலஜா 42329 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

தளிப்பரம்பு தொகுதியில் போட்டியிட்ட எம்.வி.கோவிந்தன் 34275 வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னிலையும், உடும்பன்சோலை தொகுதியில் போட்டியிட்ட எம்.எம் மணி 6547 வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னிலை பெற்றுள்ளனர்.

கேரள மாநிலத்தில் மூன்று இடங்களில் முன்னிலையில் இருந்து வந்த பா.ஜ.க தற்போது அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

பாலக்காடு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட மெட்ரோ மேன் ஸ்ரீதரன் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெற்ற பா.ஜ.க தற்போதையே தேர்தலில் அந்த இடம் கூட கிடைக்காத சூழல்தற்போது ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் பினராய் விஜயன், "எந்த இடத்தில் பா.ஜ.க கணக்கு துவக்கப்பட்டதோ அங்கே அதன் கணக்கு முடித்துவைக்கப்படும்" என தெரிவித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி கேரளாவில் பா.ஜ.கவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலையே ஏற்பட்டுள்ளது.

Also Read: தீதியிடம் பணிந்த மோடி, அமித்ஷா... 202 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை!