India

“சுதந்திர நாட்டில் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்காதது வெட்கக்கேடு” - யோகி அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் குட்டு!

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்க கேடானது என்று கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியதாவது:-

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்க கேடானது. அரசுமருத்துவமனைகளில் முறையான மின்சாரம், போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. கொரோனா தடுப்பு விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் அரசு நீதிமன்றத்தின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 14 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் 135 அரசு ஊழியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Also Read: "நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கிறார்களா?” - உ.பி முதல்வரின் பேச்சால் ப.சிதம்பரம் கொந்தளிப்பு!