India
நேற்று யுவன்... இன்று சித்தார்த்... வெறுப்பு கருத்துகளைப் பரப்பி அடிபடும் சங்கிகள்!
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிதீவிரமடைந்து வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல மாநிலங்கள் அவதிப்படுவதுடன் உயிரிழப்புகளும் வெகுவாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் மருத்துவமனைகள் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.
இதை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் சித்தார்த், “புனிதரோ அல்லது தலைவரோ... பொய் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் கன்னத்தில் அறை விழும்” எனப் பதிவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர் நடிகர் சித்தார்த் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் இழிவாகப் பதிவிட்டு, அவரது அலைபேசி எண்ணை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.
இதையடுத்து நடிகர் சித்தார்த் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய போன் நம்பரை பா.ஜ.கவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த்தின் இந்தப் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சித்தார்த்துக்கு ஆதரவாகப் பதிவிடப்பட்டு வரும் #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
முன்னதாக நேற்று, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திருக்குரான் வரிகளை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். இதற்கு ஒரு ரசிகர், “உங்கள் இசைக்காகத்தான் நான் உங்களைப் பின்தொடர்கிறேன். உங்கள் மத நம்பிக்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள அல்ல. நான் உங்களைத் தொடரட்டுமா வேண்டாமா” என்று கேட்க, அதற்கு யுவன், “தொடர வேண்டாம்” என்று பளிச்சென பதில் அளித்தார்.
இதனால் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் யுவனை இழிவாகப் பேசி பதிவிட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக யுவன், “நான் ஒரு இந்தியன், ஒரு தமிழன், ஒரு இஸ்லாமியன். தேச அடையாளமும், மதமும் வெவ்வேறு. வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள். உங்களுக்கு மன அமைதி கிடைக்கட்டும்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பா.ஜ.க-வினர் வெறுப்பைப் பரப்பும் விதமாகப் பேசி, பிரபலங்களிடமும், பொதுமக்களிடமும் குட்டு வாங்கி வருவது வாடிக்கையாகியுள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!