India
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொத்து கொத்தாக உயிரிழக்கும் நோயாளிகள் : சுடுகாட்டில் நிரம்பி வழியும் சடலங்கள்!
நாடுமுழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.30 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லி மருத்துவமனைகள் மற்றும் வட மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிகழும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், கொரோனா நோயாளிகள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.
குறிப்பாக டெல்லியில் பல இடங்களில் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களின் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அதேபோல், உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடுக் காரணமாக சிகிச்சையில் அனுமதிக்கும் முன்னதாகவே நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனால் தினசரி இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால், சுடுகாடுகளில் சடலங்களை எரிக்க இடமின்றி, அங்கங்கே உடல்களை வைத்து எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் குவியல் குவியலாக சடலங்கள் எரிக்கப்பட்டு வரும் சம்பவத்தை பிரபல வெளிநாட்டு ஊடகம் படம் பிடித்து வெளியிட்டுள்ளது. அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்