India
“கொரோனா தடுப்பூசிகள் இனி கார்ப்பரேட் கையில்” : 1000 ரூபாய்க்கு விற்கப்படும் விபரீதம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக அதிகரித்து வரும் சூழலில் நாடுமுழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக அதிரித்து வருகிறது. இந்நிலையில் மே 1ம் தேதியில் இருந்து 18வயதிற்கு மேற்பட்டோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்தியில் அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் நாடுமுழுவதுமே தடுப்பூசி தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை தரவேண்டிய மத்திய அரசு, மாநிலங்களே நேரடியாக கொள்முதல் செய்யவும், வெளிச்சந்தையில் தடுப்பூசிகளை விற்கவும் அனுமதி அளித்துள்ளது.
குறிப்பாக 3 வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் படி, முதல் 30 கோடி பேருக்கு மட்டுமே மத்திய அரசு இலவசமாக வழங்கும். அதன்பின்னர் மத்திய அரசின் 50 சதவீத ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் பெறும் தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இப்படி, தடுப்பூசிக்கு மாநில அரசுகள் மானியம் அளிக்க முன்வராவிட்டால், அந்த சுமையை மக்கள் தலையில் வைக்கவே இந்த ஆட்சியாளர்கள் முடிவு செய்வார்கள். தற்போது, வரிகளை தவிர்த்து கோவிஷீல்டு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கும், கோவாக்சின் ஒரு டோஸ் 206 ரூபாய்க்கும் மத்திய அரசு வாங்கி வந்தது.
இதில் ஒரளவே லாபம் கிடைத்ததாக மத்திய அரசிடம், தடுப்பூசி நிறுவனங்கள் புலம்பியதையடுத்து, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தடுப்பூசி விற்பனை தாராளமயமாக்கப்பட்டுள்ளது மத்திய மோடி அரசு. இதன் விளைவாக, ஒரு டோஸ் தடுப்பூசி 1000 ரூபாய் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு டோஸ் தடுப்பூசி 1000 ரூபாய் என்றால், ஏழை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி எட்டா கனியாகும். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஒரே தீர்வு தடுப்பூசிதான் என மருத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையில், பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து தங்களுடைய மக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய மோடி அரசோ, கொரோனா தடுப்பூசி விற்பனையை தாராளமயமாக்கி தடுப்பூசி விலை எகிற வைத்துள்ளது.
மோடி அரசு பிம்கேர் மூலம் மக்களிடம் வசூலித்த பணத்தைக் கொண்டு மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கலாம். ஆனால், அதனைச் செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கிக்கொள்ள சொல்லவதும் மோசமான நடவடிக்கை என விமர்சனம் எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாது, பங்கு சந்தையிலும் மருத்துவ நிறுவனத்தின் பங்குகள் அதிகம் விற்பனையாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதிக்கு மோடி அரசு தடைவிதித்து வந்தது.
ஆனால், தற்போது 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்ததுள்ளதன் விளைவாக, தடுப்பூசி தேவை அதிகரிக்கும் என்பதால் ரஷ்யாவில் இருந்து ‘ஸ்புட்னிக்’ என்ற தடுப்பூசியை இறக்குமதி செய்ய மோடி அரசு முடிவு செய்து அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தியுள்ளது.
முன்னதாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால், இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்ப்பட்டதாகவும், மோடி அரசு கொரோனா தடுப்பூசியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!