India

"படுக்கை இல்லாமல் கதறும் நோயாளிகள்” - மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த விடாமல் அலைக்கழிக்கும் பா.ஜ.க அரசு!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் நாள்தோறும் 50,000-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவுக்கு இருப்பில் இல்லாததால், மாநில அரசு கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

மேலும், கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள், வெண்ட்டிலேட்டர்கள், ஆக்சிஜன் வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையைச் சமாளிக்க முடியாமலும், மத்திய அரசின் உதவி கிடைக்காமலும் திணறி வருகிறது அம்மாநில அரசு.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மகாராஷ்டிர மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமான பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு நிதியுதவி அளிக்க ரூ.5,476 கோடியை முதல்வர் உத்தவ் தாக்கரே ஒதுக்கியுள்ளார்.

மேலும், கொரோனா தொற்று பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேணடும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: “சுபதினத்தில் பத்திரப் பதிவு செய்தால் சொத்துப் பெருகுமாம்” - அரசே மூடநம்பிக்கைக்கு துணைபோவதா?