India
“கொரோனா கொள்ளைக்கு இடையிலும் 9.45 லட்சம் கோடி வரி வசூல்” : சொந்த நாட்டு மக்களை அவதியுறச் செய்த மோடி அரசு!
கொரோனா பொது முடக்கம் 2020-21 நிதியாண்டையே குலைத்துப்போட்டது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் முடங்கியதால் நாட்டில் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவரும் கட்டுமானத்துறை உள்ளிட்ட பல்வேறு முறைசாரா தொழில்கள் நின்று போயி, உற்பத்தி தடைப்பட்டது.
அதுமட்டுமல்லாது ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பலத்த அடிவாங்கியதன் விளைவாக, கோடிக்கணக்கானோர் வேலையிழந்தனர். குறிப்பாக இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் சுமார் 3 கோடியே 20 லட்சம் பேர் புதிதாக ஏழைகளாகி இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்நிலையில், கடந்த 2020-21 நிதியாண்டில் நேரடி வரி வசூல் மூலம் 9 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி வசூலித்துள்ளது மத்திய பா.ஜ.க அரசு. 2020-2021 நிதியாண்டில், அரசுக்கு கிடைத்த வருவாய் குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், “மத்திய பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய்க்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ. 9 லட்சத்து 5 ஆயிரம் கோடி அளவிற்குத்தான் வரி வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், கம்பெனி வரிகள் மூலம் ரூ. 4 லட்சத்து 57 ஆயிரம் கோடி, தனிநபர் வருமான வரி மூலம் ரூ. 4 லட்சத்து 71 ஆயிரம் கோடி, பங்கு பரிவர்த்தனை வரி மூலம் ரூ. 16 ஆயிரத்து 927 கோடி என மொத்தம் ரூ. 9 லட்சத்து 45 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.
இது இலக்கை விட 5 சதவிகிதம் அதிகமாகும். மேலும், கணிசமாக ‘ரீபண்ட்’ கொடுத்த பிறகும் இவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அதேநேரம், “முந்தைய 2019 - 2020 நிதியாண்டின் நேரடி வரி வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவிகிதம் குறைவுதான்” என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?