India

தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு; தடுப்பூசி திருவிழாவும் கைதட்டுவது போன்று வெற்று ஜம்பம்தானா !?

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 384 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 794 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனா தொற்று ஒரு லட்சத்திற்கு மேல் பதிவாகி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்குத் தினமும் கொரோனா தொற்று பதிவாகி வருவதால், தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் முதல்வர் உத்தவ் தாக்ரே தினரிவருகிறார். இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மும்பையில் அமைக்கப்பட்டுள்ள 120 கொரோனா தடுப்பூசி மையங்களில் 75 மையங்கள் திங்கள் கிழமை வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கொரோனா தடுப்பூசிகள் கொடுத்து உதவி வேண்டும் என மத்திய அரசுக்குக் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்தார். ஆனால் மத்திய அரசோ, ஏற்கனவே நீங்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வீனடித்துவிட்டிற்கள் என மகாராஷ்டிர மாநிலத்தில் மோசமான நிலையை உணராமல் அலட்சியமாக பதிலளித்துள்ளது.

இதேபோல், சட்டீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மேலும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவிலான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளுக்கு மருந்துகள் அனுப்பி வைப்பதை நிறுத்தி விட்டு நமது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

இப்படி இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14 வரை தடுப்பூசி திருவிழா நடத்தவேண்டும் என முதல்வர்கள் உடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளபோது எப்படி தடுப்பூசி திருவிழா நடத்த முடியும் என மாநில அரசுகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மேலும், கடந்த முறை கொரோனா பரவலின் போது, கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என எப்படி வார்த்தை ஜாலத்தால் மக்களை ஏமாற்றிவந்தாரோ அதேபோலத்தான் இந்த முறையும் கொரோனாவுக்கு எதிராகப் போராடவேண்டும், தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டும் என வெற்று வார்த்தைகளைப் பேசி வருகிறார் பிரதமர் என மாநில அரசுகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன.

Also Read: எங்கே போனது எம்.பி நிதி? : கொரோனா தடுப்பும் இல்லை.. தொகுதி நிதியும் இல்லை - மோடி அரசால் மக்கள் அவதி!