India

பாலியல் குற்றவாளியின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட சீட்... பா.ஜ.க பெண்களைக் காக்கும் லட்சணம் இதுதானா?

உன்னாவ் இளம்பெண் பாலியல் வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கரின் மனைவிக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க சீட் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகள் பலர் பாலியல் வழக்குகளில் தொடர்பு கொண்டிருப்பதும் அவ்வப்போது அம்பலமாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண் பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கரால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலியல் வல்லுறவுக்குள்ளான இளம்பெண்ணின் தந்தையும் மர்மமான முறையில் உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 15 முதல் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 5 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டது.

பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குல்தீப் செங்காரின் மனைவி சங்கீதாவுக்கு, ஃபதேபூர் சவுராசி திரிதாயா பகுதியில் போட்டியிட பா.ஜ.க சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

பாலியல் வல்லுறவு குற்றவாளியின் மனைவிக்கு பா.ஜ.க சீட் வழங்கியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் பா.ஜ.க பெண்களைக் காக்கும் லட்சணம் என பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.

Also Read: "இந்திய மக்களே திண்டாடும்போது, வெளிநாட்டு ஏற்றுமதி அவசியமா?” - பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி!