India

மராட்டியத்தை மிரட்டும் கொரோனா: மீண்டும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்கள்!

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த பொது முடக்கம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது புலம் பெயர்ந்தோர் மற்றும் தினசரி ஊதியம் பெறுபவர்கள்தான்.

அவர்களில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை நாம் பார்த்தோம். நாடு முழுவதிலும் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அடுத்த வேளை உணவிற்கு வழியில்லாமல் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைப் பயணம் தொடங்கினர்.

விமானம், ரயில், பேருந்து, ஆட்டோ என அனைத்து சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால், குழந்தைகளை தூக்கிக்கொண்டும் வயதானவர்களும் பெண்களும் என லட்சக்கணக்கான இந்தியர்கள் பல நூறு மைல்களை கால்நடையாகவே நடக்கத் தொடங்கினர்.

கொரோனா பாதிப்பின் காரணமாக, ``இதே நிலைமை தொடர்ந்தால் அடுத்த இரண்டு நாட்களில் மாநிலம் முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும்" என்று முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்ததையடுத்து தற்போதைய நிலைமை மக்கள் கட்டுப்பாடற்ற முறையில் விதிமுறைகளை மீறுவதால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி வரும்.

இதனால் சில நிபுணர்களுடன் கலந்துரையாடி, தனது முடிவை வரும் நாள்களில் அறிவிப்பதாக உத்தவ் தாக்கரே விளக்கம் கொடுத்துள்ளார். இதனிடையே, உத்தவ் தாக்கரே விடுத்த பொதுமுடக்க எச்சரிக்கை கொடுத்த பயத்தின் காரணமாக மும்பையில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் நேற்று முதல் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்லக் குவிந்து வருகின்றனர். இதனால் ரயில் நிலையம் பரபரப்பாகவே காணப்படுகிறது. தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்வதைத் தவிர்ப்பதற்காக, மகாராஷ்ட்ரா மாநில அமைப்புகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Also Read: எகிறும் கொரோனா தொற்று: மோடி அரசின் பிடிவாதத்தால் நாடு பேரழிவை சந்திக்கப் போகிறது - ப.சிதம்பரம் எச்சரிக்கை