India
“அரசுக்கு எதிராக பேசுவோருக்கு என்கவுண்டர் காத்திருக்கிறது” - பகிரங்கமாக மிரட்டல் விடுத்த மே.வ பாஜக தலைவர்
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் நேற்றோடு மூன்று கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. இன்றும் 5 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளதால் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. எப்படியாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நினைப்பில் நடந்து முடிந்த மூன்று கட்ட தேர்தல்களிலும் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி பா.ஜ.க அராஜகமாக நடந்து கொண்டது.
இந்நிலையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் துருவா சகா, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பியவர்கள் சுட்டுக்கொலை செய்யப்படுவார்கள் என பேசியது மேற்குவங்க மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்ட பா.ஜ.க தலைவராக இருப்பவர் துருவா சகா. இவர் நானூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், "மே 2ம் தேதி மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியமைக்கும். நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பியவர்கள் நிச்சயமாக மே 2ம் தேதிக்கு பிறகு போலிஸ் என்கவுண்டர் செய்யப்படுவர்" என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இவரின் இந்த மிரட்டல் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!