India
தொடரும் பா.ஜ.கவின் தில்லுமுல்லு... அசாமில் 90 வாக்காளர்கள் இருந்த வாக்குச்சாவடியில் 181 வாக்குகள் பதிவு!
அசாமில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கு, முத்ல் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் இன்று மூன்றாவது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 1ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலின் போது அங்கு குளறுபடி நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. ஹப்லாங் தொகுதியில் உள்ள ஒரு கிராமப்புற வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்து, இந்த வாக்குச்சாவடியிலிருந்து வந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை அதிகாரிகள் சோதனை செய்துபார்த்தபோது 181 வாக்குகள் பதிவாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், இது குறித்து தேர்தல் ஆணைய அதிகார்கள் விசாரணை நடத்தினர். இதில் அந்த கிராமத்தின் தலைவர், தேர்தல் பணியாளர்கள் வைத்திருந்த வாக்காளர் பட்டியலை நிராகரித்துவிட்டு, தான் கொண்டு வந்த வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரையும் வாக்களிக்க வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் பணியாற்றிய 5 அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
மேலும், அந்த வாக்குச்சாவடியில் போலிஸார் யாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவில்லை. இதனால் அந்த கிராமத்துத் தலைவர் எங்களை மிரட்டியதால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், இரண்டாம் கட்டதேர்தலில், கரீம்கஞ்ச் ரத்னாரி தொகுதிக்குட்பட்ட எம்.வி. பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பா.ஜ.க எம்.எல்.ஏ கிருஷ்னேந்து பால் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் அதிகாரிகளின் இந்த செயலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்திருந்தனர்.
அசாம் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க தேர்தல் ஆணையத்தின் உதவியோடு வாக்குப்பதிவு எந்திரங்களில் பல்வேறு குளறுபடிகளைச் செய்து வருவது தொடர்ந்து வெளிச்சத்திற்கு வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!