India
அசாம், மேற்கு வங்கத்தில் இன்று முதற்கட்டத் தேர்தல் : வாக்குப்பதிவில் குளறுபடியை ஏற்படுத்த பா.ஜ.க திட்டம்?
ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான முதற்கட்டத் தேர்தல்சனிக்கிழமையன்று துவங்குகிறது. இதில், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள், அசாமில் 47 தொகுதிகள் என மொத்தம் 77 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக் கான வாக்குப் பதிவு மார்ச் 27ல் துவங்கி ஏப்ரல் 29 வரை மொத்தம் 8 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதியும், அசாமில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், மேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடைபெறும் என்று ஆணையம் கூறியிருந்தது.
அதன்படி அசாம் மாநிலத்தில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் முதற் கட்டமாக 30 தொகுதிகளுக்கும் மார்ச் 27 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற எந்த எல்லைவரை போகத் தயாராக இருக்கும் பா.ஜ.க வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவின் போது குளறுபடிகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையொட்டி வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில காவல் துறையினர், துணைராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !