India
இதுதான் குஜராத் மாடலா மிஸ்டர் மோடி?: 2 ஆண்டுகளில் 13,000 குழந்தைகள் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்!
குஜராத் மாநிலத்தை 1995ல் இருந்து தொடர்ச்சியாக பா.ஜ.க கட்சிதான் ஆட்சி செய்துவருகிறது. இந்தியாவிற்கே குஜராத் மாநிலம்தான் முன்மாதிரியாகத் திகழ்கிறது என்ற மாயத்தோற்றத்தை நரேந்திர மோடி, அமித்ஷா போன்றவர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். ஆனால் சுகாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றில் குஜராத் மாநிலம் பின்தங்கியுள்ளதாகப் பல ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டுவரும், பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் சட்டசபையில், கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, துணை முதல்வர் நிதின் பட்டேல் இந்த அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டன. இதில் 13 ஆயிரத்து 496 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். இவரின் இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், தினமும் சராசரியாக 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், அகமதாபாத் மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 134 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
பச்சிளங்குழந்தைகளின் உயிரிழப்பை பார்க்கும்போது, குஜராத் மாநிலத்தின் சுகாதாரத்துறை எந்த அளவு மோசமாக இருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆனால் மோடி, அமித்ஷா போன்ற பா.ஜ.க தலைவர்கள் குஜராத் மாடல் என போலியாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!