India
3 தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர்களின் மனு நிராகரிப்பு; கேரளாவில் பரிதாப நிலையில் பா.ஜ.க!
கேரள மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க, சுயட்சை வேட்பாளர்கள் என 2,138 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வேட்பாளர்களின் வேட்பு மனு மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் தலசேரி, குருவாயூர், தேவிகுளம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களின் வேட்பு மனுக்களைத் தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துள்ளன. இதனால் இந்த மூன்று தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக மாவட்ட பா.ஜ.க தலைவர் ஹரிதாஸ் களமிறக்கப்பட்டார். ஹரிதாஸின் வேட்பு மனுவில் தேசிய பாஜக தலைவரின் கையெழுத்து இல்லை என்பதற்காக அவருடைய வேட்பு மனுவைத் தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தனர்.
அதேபோல், திருச்சூர் மாவட்டம், குருவாயூர் தொகுதியில் பா.ஜ.க மாநில மகளிர் அணி தலைவி நிவேதிதா வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவிலும், மாநில தலைவரின் பெயர் பூர்த்தி செய்யப்படாததால், வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.
இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தேவிகுளம் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளராக அ.தி.மு.கவைச் சேர்ந்த ஆர்.தனலட்சுமி என்பவர் களமிறக்கப்பட்டார். இவருடைய வேட்பு மனுவில் பல்வேறு முரண்கள் இருப்பதாகவும் கூறி தேர்தல் அதிகாரி தனலட்சுமியின் வேட்பு மனுவை நிராகரித்துள்ளனர்.
இதனால், இந்த மூன்று தொகுதிகளில் வேட்பாளர்கள் இல்லாமல் சட்டமன்ற தேர்தலை பாஜக எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. மாநிலத்தில் புதிய சக்தியாக உருவெடுக்கும் நோக்கில் களமிறங்கியிருக்கும் அக்கட்சிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில் 115 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுகிறது. இந்த 115 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவிக்கவே பா.ஜ.க தலைமை கடும் சிரமப்பட்டு, ஒரு வழியாக ஆட்களைப் பிடித்து வேட்பாளர்களை அறிவித்தது. தற்போது மூன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் பா.ஜ.க தலைமை என்ன செய்வது என்று தெரியாமல் திணறிவருகிறது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!