India
தீதியை அசைக்க முடியாத அமித்ஷா,மோடி : மம்தாவை கொன்று ஆட்சியைப் பிடிக்கத் திட்டம்?
மேற்குவங்க மாநிலத்தில், மார்ச் 27ம் தேதியிலிருந்து எட்டு கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பிரதான கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில், மோடியும், அமித்ஷாவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ, எம்.பி, மூத்த தலைவர்களைக் குதிரை பேரம் பேசி பா.ஜ.கவில் சேர்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் அசராமல் முதல்வர் மம்தா பானர்ஜி பா.ஜ.கவை துணிவுடன் எதிர்த்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையின்போது, மம்தா பானர்ஜியை மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டதில், அவரது காலில் காயம் ஏற்பட்டது. இருந்தபோதும் காலில் ஏற்பட்ட காயத்துடனேயே சக்கர நாற்காலியில் அமர்ந்து மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் மேற்கு வங்கத்தின் பேசுபொருளாக மாறிவிட்டிருக்கிறார் மம்தா. இது பா.ஜ.கவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மம்தா வாக்குகளைப் பெற நடகமாடுவதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், மெஜியா, சாத்னா நகரங்களில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், " மத்திய அமைச்சர் அமித்ஷா, நாட்டை வழி நடத்தாமல், மேற்கு வங்கத்தில் அமர்ந்துகொண்டு, அரசின் மூத்த அதிகாரிகள், திரிணமுல் காங்கிரஸ் தலைவர்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்.
அமித்ஷா பங்கேற்கும் பிரச்சார கூட்டத்திற்கு, கூட்டம் கூடாததால் விரக்தியில் உள்ளார். மேலும், சி.பி.ஐ., அமலாக்கத்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, அரசியல் எதிரிகளைப் பழி வாங்கத் திட்டம் தீட்டி வருகிறார். மேலும், அமித்ஷாவின் கைப்பாவையாக இருக்கும் தேர்தல் ஆணையம், எனக்குப் பாதுகாப்பு பிரிவு இயக்குநராக இருந்த விவேக் சஹாயை நீக்கியுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க சொல்ல விரும்புவது என்ன? என்னைக் கொன்று விட்டு, தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என, நினைக்கிறதா? அப்படி நினைத்தால் அது தவறு. இந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்" என தெரிவித்துள்ளார்.
மம்தாவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டு அம்மாநில மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். இதனால், அங்கு பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!