India
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒருநாள் முன்பு ‘பாரத் நெட்’ டெண்டருக்கு அனுமதி : மோடி அரசின் அடுத்த ‘பலி’ ?”
பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏராளமான வரிச் சலுகை, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான டெண்டர், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க தீவிரமாக முயற்சிகள் என பல்வேறு செயல்களை முனைப்புடன் செய்து வருகிறது.
குறிப்பாக சேலம் உருக்காலை, விமான நிலையங்கள், ரயில் பெட்டித் தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் நிறுவங்கள் மற்றும் ரயில்வே துறை என அனைத்து பொதுத்துறைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, மக்களுக்குச் சேவை செய்யப்போவதாக பா.ஜ.க அரசு தம்பட்டம் அடித்து வருகிறது.
இந்நிலையில், கிராமங்களில் இன்டர்நெட் இணைப்பு வழங்கும் பாரத் நெட் திட்டத்தை செயல்படுவதற்கு ரூ.2000 கோடி அளவில் டெண்டர் விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள 12,524 கிராமங்களுக்கு அதிவேக இன்டெர்நெட் இணைப்புகளைக் கொண்டுசேர்க்கும் வண்ணம் உருக்கப்பட்ட திட்டமே ‘பாரத் நெட் திட்டம்’. இத்திட்டத்திற்கான பணிகளை தமிழ்நாடு ஃபைபர்நெட் கழகம் (TANFINET) மேற்கொண்டு வந்தது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்காமல், டெண்டர் மூலம் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு முடிவு செய்திருந்தது.
மத்திய அரசின் இத்தகைய முடிவுற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தபோதும், அதனைக் காதில் வாங்கிக்கொள்ளாத மோடி தற்போது பாரத் நெட் திட்டத்தை டெண்டருக்கு விட்டுள்ளது.
முன்னதாக, டெண்டர் விடுவதில் முறைகேடுகள் இருப்பதாகவும், குறிப்பிட்ட சில நிறுவனங்களில் ஒப்பந்தத்தைப் பெற ஏதுவாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் அறப்போர் இயக்கம், தி.மு.க குற்றம்சாட்டி வந்தன. அதுமட்டுமல்லாது, தமிழக அரசு இந்தத் திட்டம் தொடர்பான விளக்கங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் நீதிமன்றங்களுக்குத் தொடர்ந்து அளித்து வந்தது.
அதனைத் தொடர்ந்து த்திய வர்த்தக அமைச்சகம், டெண்டர் விதிகளை அரசு முறையாகப் பின்பற்றவில்லை என்றுகூறி பாரத்நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து அறிவித்தது. ஆனால், மீண்டும் இந்த செயல்படுத்தி லாபம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து சில நிபந்தனைகளை மாற்றியது TANFINET நிறுவனம்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முந்தைய நாளான பிப்ரவரி 25ம் தேதி பாரத் நெட் டெண்டருக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. தேர்தல் நடத்தைவிதி அமலுக்கு வரும் முந்தைய நாள் பாரத் நெட் டெண்டருக்கு அனுமதி தரப்பட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!