India
“இந்த வேட்பாளருக்கு எல்லாம் வேலை செய்ய முடியாது” : மே.வங்கத்தில் போர்க்கொடி தூக்கிய பா.ஜ.க தொண்டர்கள்!
மேற்குவங்க மாநிலத்தில், மார்ச் 27ம் தேதியிலிருந்து எட்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதான கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில், மோடியும், அமித்ஷாவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ, எம்.பி, மூத்த தலைவர்களைக் குதிரை பேரம் பேசி பா.ஜ.கவில் சேர்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் அசராமல் முதல்வர் மம்தா பானர்ஜி பா.ஜ.கவை துணிவுடன் எதிர்த்து வருகிறார்.
சமீபத்தில், மம்தா பானர்ஜியை மர்ம நபர்கள் கீழே தள்ளிவிட்டதில், அவரது காலில் காயம் ஏற்பட்டது. இருந்தபோதும் காலில் ஏற்பட்ட காயத்துடன் மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் மேற்கு வங்கத்தின் பேசுபொருளாக இருந்து வருகிறார் மம்தா. இது பா.ஜ.கவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோதாதென்று மற்றொரு பிரச்னையும் தற்போது பா.ஜ.கவிற்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி, பா.ஜ.கவில் இணைந்தவர்களால் மம்தாவிற்குச் சிக்கல் ஏற்படும் எனக் கருதப்பட்ட நிலையில், அது பா.ஜ.கவிற்கே சிக்கலாகியிருக்கிறது.
பா.ஜ.க கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தொண்டர்கள் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, ஹூக்லி மாவட்டத்தின் சின்சுராவில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், சந்தர்நாகூரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்குப் பூட்டு போட்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதேபோல், மேற்கு வங்கத்தின் ஹவுராவிலும் பா.ஜ.கவுக்கு எதிராகத் தொண்டர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜ.கவில் புதிதாக இணைந்தவர்களுக்கு, இதற்கு முன்பு இருந்தே பா.ஜ.கவில் இருந்தவர்களுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதால், இதை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் மேற்கு வங்க பா.ஜ.க தலைமை திணறிவருகிறது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!