India
“5 மாநில தேர்தலிலும் பா.ஜ.க படுதோல்வியடையும்; தமிழகத்தில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும்”: சரத்பவார் உறுதி!
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பா.ஜ.க மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்து பா.ஜ.க 20 தொகுதியில் களம் காண்கிறது. மேலும், மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க கடுமையாக முயற்சித்து வருகிறது. அதேபோல், அசாமில், பா.ஜ.க ஆளும் கட்சியாகத் தேர்தலை எதிர்கொள்கிறது.
மேலும், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் பா.ஜ.க தோல்வியடையும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறிவரும் நிலையில், ஐந்து மாநிலங்களிலும் பா.ஜ.க படுதோல்வியடையும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பரமதி தொகுதியில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய சரத்பவார், “கேரளாவில் இடதுசாரி கூட்டணி தெளிவான பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும். அதேபோல் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.
மேலும், மேற்குவங்க மாநிலத்தில், பா.ஜ.க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, முதல்வர் மம்தா பானர்ஜியை தாக்க முயல்கிறது. ஆனால், மக்கள் ஆதரவுடன் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். இந்த ஐந்து மாநில தேர்தலும், இந்திய நாட்டை புதிய பாதையில் பயணிக்க வைக்க ஒரு வாய்ப்பை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!