India
"பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிடுவதா? ஆள விடுங்க சாமி...” - பதறியடித்து ஓடிய வேட்பாளர்!
கேரள மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 115 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டது. அதில் மனந்தவாடி தொகுதியில் மணிகண்டன் போட்டியிடுவதாக பா.ஜ.க தலைமை அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை பார்த்து மணிகண்டன், தான் பா.ஜ.க கட்சியிலேயே இல்லாதபோது தன் பெயர் எப்படி அறிவிக்கப்பட்டது என அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு இதுகுறித்து பா.ஜ.க தலைவர்களிடம் மணிகண்டன் கேட்டபோது, நீங்கள்தான் வேட்பாளர் எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ளார் மணிகண்டன்.
இதுகுறித்து மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் பா.ஜ.க-விலேயே இல்லை. பா.ஜ.க ஆதரவாளர் கூட இல்லை. என்னுடைய பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றதைப் பார்த்து நானே அதிர்ச்சியடைந்தேன். சரி என்னுடைய பெயரில் வேறு யாராவது இருப்பார்கள் என நினைத்து பா.ஜ.க நிர்வாகிகளிடம் கேட்டபோது, நீங்கள்தான் என அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.
தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. என்னுடைய குடும்பத்திலும் யாரும் அரசியலில் இல்லை. எனவே நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் தலைகீழாக தொங்கவிடப்பட்டாலும், எம்மக்களுக்கு துரோகமிழக்க மாட்டேன்" எனக் குறிப்பிட்டு, அம்பேத்கர் படத்தை இணைத்து வெளியிட்டுள்ளார்.
கால்நடைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் மணிகண்டன் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!