India
"மம்தா மீது பா.ஜ.க நடத்திய தாக்குதலே என்னை திரிணாமுல் காங்கிரஸில் இணையவைத்தது" : யஷ்வந்த் சின்ஹா பேச்சு!
மேற்கு வங்க மாநிலத்தில், எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், எப்படியாது மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் என பலரை குதிரை பேரத்தின் வாயிலாக விலைக்கு வாங்கி வருகிறது பா.ஜ.க. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 2018ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.கவில் இருந்து வெளியேறிய யஷ்வந்த் சின்ஹா இன்று கொல்கத்தாவில், சுதிப் பானர்ஜி, டெர்ரிக் ஓ பிரையன், சுப்ரதா முகர்ஜி ஆகியோர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசுகையில், "வாஜ்பாய் காலத்தில் பா.ஜ.கவின் கருத்தொற்றுமை மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், இன்றைய அரசு அதை அழிப்பதிலும், வெற்றி பெறுவதிலும் நம்பிக்கை கொண்டுள்ளது. பா.ஜ.க.வில் இருந்து அகாலிதள், பிஜு ஜனதா தளம் வெளியேறி விட்டது. இன்று பா.ஜ.க.வுடன் யார் இருக்கிறார்கள்?
நீதித்துறை உட்பட நாட்டின் நிறுவனங்கள் அனைத்தும் வலுவிழந்துவிட்டன. இது ஒரு அரசியல் மோதல் மட்டுமல்ல, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மோதலும் கூட. நந்திகிராமில் மம்தா பானர்ஜி மீது நடந்த தாக்குதலே திரிணாமுல் காங்கிரசில் நான் இணைவதற்கு அடிப்படையாக அமைந்தது" என தெரிவித்துள்ளார்.
யஷ்வந்த் சின்ஹா, வாஜ்பாய் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், சந்திரசேகர் அரசில் மத்திய நிதியமைச்சராகவும், பா.ஜ.கவின் தேசிய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!