India
தனியார் மயத்தைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் போராட்டம்; நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தார். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு,பொதுத்துறை வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இதன்படி, மத்திய அரசின் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து வருகிற 15 மற்றும் 16ம் தேதிகளில் வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. மேலும் நாளை இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை என்பதாலும், வங்கிய ஊழியர்கள் போராட்டம் நடைபெறுவதாலும் தொடர்ச்சியாக, நான்கு நாட்களுக்கு வங்கிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை , டெபாசிட் , செக் கிளியரன்ஸ் போன்ற வங்கிப் பணிகள் பாதிக்கப்படக்கூடும். மேலும், ஏ.டி.எம் சேவைகளும் செயலிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் போராட்டம் குறித்து, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் கூறுகையில், "ஏற்கெனவே பொதுத்துறை வங்கியான ஐடிபிஐயின் பெரும்பான்மை பங்குகளை எல்.ஐ.சி.யிடம் 2019ல் விற்றுள்ளது. மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் 14 பொதுத்துறை வங்கிகளை இணைத்துள்ளது. தற்போது மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்க திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மார்ச் 4, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தச் சாதகமான முடிவும் எட்டப்படவில்லை. எனவே வங்கி ஊழியர் சங்கங்கள் இணைந்து மார்ச்15, 16 இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!