India
“7 ஆண்டுகளில் கலால் வரி 459% உயர்த்தப்பட்டிருக்கிறது” - மத்திய பா.ஜ.க அமைச்சர் பரபரப்பு வாக்குமூலம்!
மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இருமடங்கு உயர்த்தப்பட்டதை நாடாளுமன்றத்தில் மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சியில் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே ஏழை எளிய மக்களுக்கு, விவசாயிகளுக்கு விரோத அரசாகவே செயல்பட்டு வருகின்றது.
குறிப்பாக ஏழை எளிய, நடுத்தர குடும்பத்தினர் பயன்படுத்தும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு நூறு ரூபாய், நூற்று ஐம்பது ரூபாய் என்று ஏற்றிக் கொண்டே வருகிறது. இரண்டு மாதத்தில் 275 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய அரசு ஒன்று உண்டென்றால் அது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தான். இன்று சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டர் விலை ரூ. 835க்கு விற்கப்படுகின்றது.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன் விலை உயர்வினை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். அதே போன்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் வரலாறு காணாத வகையில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சியினரும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும், இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது குறித்தும், விவாதிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றம் தொடங்கிய திங்கட் கிழமை முதல் (8ம் தேதி முதல்) தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன.
இரு அவை கூடியதும் இந்த பொருட்களின் விலை ஏற்றம் குறித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக முழக்கமிட்டு விலை ஏற்றம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து முழக்கமிட்டு வருவதால் அவ்வப்போது மாநிலங்களவை, மக்களவைகளில் இந்த விலை ஏற்றம் குறித்து விவாதிக்காமலேயே இரு அவைகளையும் இரு சபைத் தலைவர்கள் ஒத்திவைத்து வருகின்றனர்.
திங்கட்கிழமை முதல் நேற்று (புதன்கிழமை) வரையில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசு விவாதிக்கவே முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் நாடாளுமன்றத்தில், எழுத்து மூலம் பதிலளித்துள்ளார். அதில், 2014ம் ஆண்டு மார்ச் மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 410 ரூபாயாக இருந்ததாகவும் 2021 மார்ச் மாதம் அதன் விலை 819 (சென்னையில் 835 ரூபாய்) ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இருமடங்கு அதாவது 409 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதை மத்திய பா.ஜ.க. அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதேபோல், டீசல் விலை கடந்த ஏழு ஆண்டுகளில் 26 ரூபாயும், மண்ணெண்ணெய் விலை 20 ரூபாயும், பெட்ரோல் விலை 18 ரூபாயும் உயர்ந்திருக்கிறது.
அதே நேரத்தில் 2016 - 17 ஆம் ஆண்டு 47.56 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 42.78 டாலராகக் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியாக மட்டும் அரசுக்கு 12 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருப்ப தாகவும், அதாவது 459 சதவீதம் உயர்த்தியிருப்பதாகவும் மத்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம், கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தி வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?