India
"வேளாண் சட்டம் குறித்து பிரிட்டன் விவாதித்தது ஜனநாயக உரிமையே" : பா.ஜ.க விமர்சனத்துக்கு சசிதரூர் பதிலடி!
இந்தியாவில், மோடி அரசு கொண்டுவந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லி எல்லைப் பகுதியில் 100 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் பா.ஜ.க அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனால், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து உலக நாடுகளைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவசாயப் போராட்டங்கள் குறித்தும், வேளாண் சட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த பா.ஜ.க அரசு பிரிட்டன் தூதருக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பிரிட்டன் நாடாளுமன்றத்தில், வேளாண் சட்டங்களை விவாதித்தது சரியே, இது ஜனநாயக உரிமையே எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சசி தரூர் பேசுகையில், "இந்திய நாடாளுமன்றத்தில் நாம் பாலஸ்தீனம் இஸ்ரேல் சர்ச்சையை பேசவில்லையா? அதுபோல், வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி பேசியது இல்லையா? அதே உரிமை பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கும் உண்டு தானே. எனவே பிரிட்டன் நாடாளுமன்றம் விவாதித்ததில் எந்தத் தவறும் இல்லை. ஜனநாயக நாடுகளில் இத்தகைய விவாதங்கள் ஏற்கக்கூடியதே" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!