India
அந்த ரத்தக்கறையை எப்படி மறைப்பீர்கள்? : மோடி - அமித் ஷா நோக்கி கேள்வி எழுப்பும் டெரிக் ஓபிரையன்!
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மார்ச் 27ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களை பா.ஜ.க விலை பேசி வாங்கி வருகிறது. இதனால் மம்தாவுக்கு நெருக்கடியான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும், தேர்தல் பரப்புரைகளின் போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் இடையே கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் கைகள் ரத்தக்கரைப் படிந்தவை என திரணாமுல் எம்.பி. டெரிக் ஓபிரையன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “அரசியல் கொலைகள் பற்றி பா.ஜ.க பேசுகிறது. திரிணாமுல் கட்சி அரசியல் கொலைகள் செய்வதாக அபாண்டமாகப் பேசி வருகின்றனர். ஆனால், மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் கொலைகளுக்கு பழைய பா.ஜ.க, புதிய பா.ஜ.க மற்றும் இப்போது பா.ஜ.கவில் தாவியவர்கள் தான் காரணமாக இருக்கின்றனர்.
நாடு முழுதும் 300 பா.ஜ.க எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் குற்ற வழக்குகள் உள்ள 130 எம்.பிக்களுக்கு தேர்தல் சீட்டு வழங்கியது ஏன்?, அரசியல் வன்முறை பற்றி மோடி, அமித்ஷா பேசலாமா? அப்போ, 2002 குஜராத் கலவரங்கள் பற்றி பேசலாமா? இந்த இருவரின் கைகளும் ரத்தக்கரை படிந்தவை.
மத்தியில், ஆட்சியில் இருப்பதால் ஊடகங்களைப் பேரம் பேசி விலைக்கு வாங்குகின்றனர். பா.ஜ.கவுடன் கூட்டாளியாக இருந்த ஷிரோமணி அகாலி தளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வெளியேறிவிட்டனர். அதனால் தான் சி.பி.ஐ, அமலாக்கத் துறையுடன் கூட்டணி வைத்து அனைவரையும் மிரட்டி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!