India
இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் - விலையேற்றத்தின் அதிர்ச்சி பின்னணி என்ன?
இந்தியாவில், கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ஐ கடந்து விற்கப்படுகிறது. டீசல் விலையும் கிட்டத்தட்ட 100ஐ நெருங்கிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சவூதி அரேபியா தலைமையிலான ஒபேக் பிளஸ் நாடுகளின் இணையவழி கூட்டம் நடைபெற்றது. அதில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்திலும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, ஒபேக் பிளஸ் நாடுகளின் இந்த முடிவால், இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 65 டாலருக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே மும்பை உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்கிவிட்டது. விரைவில் அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அண்மையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் "2021ம் ஆண்டு தொடக்கத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ஒபேக் பிளஸ் கூட்டமைப்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சை பார்க்கும் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்பது தெல்லத் தெளிவாக தெரிகிறது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு