India
“இதுவரை 282 விவசாயிகள் பலி” : மோடி அரசின் பிடிவாதத்தால் 100-வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்!
மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 3 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டெல்லியின் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 11 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்ததுள்ளது. மேலும், சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் தெரிவிக்கும்படியும் கூறி மத்திய அரசு எழுதிய கடிதத்தையும் விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.
இதனிடையே, ஜனவரி 26-ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியை கலவரமாக்கியது பா.ஜ.க அரசு. ஆனாலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் விவசாயிகள் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தின் தாக்கம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் எதிரொலித்த சூழலில் அடுத்ததாக தங்களுடைய போராட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் விரிவுப்படுத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, அடுத்த கட்ட போராட்டமாக சனிக்கிழமை அன்று குண்டலி, மானேசர், பல்வல் அதிவேக சாலையில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் நடத்துகிறார்கள். அதேப்போல், மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் விவசாயிகள் முன்நின்று டெல்லி எல்லைகளை போராட்டங்களை நடத்துகிறார்கள்.
மேலும், மார்ச் 15, 16ஆம் தேதி வங்கி ஊழியர்கள் நடத்தும் போராட்டத்துக்கு விவசாயிகள் ஆதரவு தெரிவித்து பல இடங்களில் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். அதோடு, மார்ச் 17, 18 தேதிகளில் பொது இன்சூரன்ஸ், எல்.ஐ.சி ஊழியர்கள் நடத்தும் போராட்டத்திலும் போராட்டத்திற்கும் விவசாயிகள் தங்களுடைய ஆதரவினை தெரிவித்திருக்கிறார்கள்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!