India

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : தடுப்பு நடவடிக்கைகளில் கோட்டைவிட்ட மோடி அரசு!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துவிட்டதாககூறி, கொரோனா கட்டுபாட்டு விதிகள் தளர்த்தப்பட்டது. இதில், மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது.

மேலும் அரசு நடவடிக்கைகளில் மூலம் குறைக்கப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதாவது, கடந்த வாரம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொங்கியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,838 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,04,66,595 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 113 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,57,548 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 16,838 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 1,08,39,894 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, 1,76,319 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குணமடைந்தோர் விகிதம் 97.01% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.41% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.58% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4,59,209 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 1,80,05,503 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

Also Read: “இதுவரை 282 விவசாயிகள் பலி” : மோடி அரசின் பிடிவாதத்தால் 100-வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்!