India
ஆபாச வீடியோவில் சிக்கிய பா.ஜ.க அமைச்சர் : பெண்ணுக்கு கொலை மிரட்டல் - மேலும் ஒரு அமைச்சருக்கு தொடர்பு?
கர்நாடகா முழுவதும் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிற விவகாரம், கர்நாடக பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது. தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணை, படுக்கை அறைக்கு அழைத்து மிரட்டி ஆபாசமாக நடந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் அமைச்சரவையில் மிக முக்கியமான பொறுப்பில் இருப்பவர் ரமேஷ் ஜார்கிகோளி. கடந்த முறை 15 தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பெல்காம் மாவட்டம் கோகாக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்தான் இந்த ரமேஷ். மேலும், பெல்காம் மாவட்டத்தில் செல்வாக்கு பெற்ற இவர், கர்நாடக அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பதிவியை கேட்டு வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், கர்நாடகாவில் இருக்கும் அணைகள் குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிப்பதற்காக, அணைகளை ட்ரோன் மூலம் காட்சிப் பதிவு செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதற்காக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிகோளியை சந்தித்து அனுமதி கேட்டிருக்கிறார்.
அதற்கு அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி, “உனக்கு அணைகளை வீடியோ எடுப்பதற்கு மட்டுமில்லை... அரசு வேலையே வாங்கித் தருகிறேன்” எனக் கூறி அந்தப் பெண்ணின் போன் நம்பர் உள்ளிட்ட தகவல்களை வாங்கி வைத்துக்கொண்டு, அவரிடம் பேசி “தன்னுடைய ஆசைக்கு இணங்கினால், உனக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன்” எனக் கூறியதோடு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
அமைச்சரின் மிரட்டலுக்கு பயந்து அந்தப் பெண் அவர் சொன்னபடி நடந்துகொண்டுள்ளார். மேலும், இதன் மூலம் அமைச்சருக்கும் அந்தப் பெண்ணிற்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு, எம்.எல்.ஏ பவனிலேயே அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததோடு, வாட்ஸ்-அப் வீடியோ காலில் ஆபாசமாகவும் பேசியுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி தான் சொன்னபடி, அந்தப் பெண்ணுக்கு அரசாங்க வேலை வாங்கித்தராமல் ஏமாற்றி வந்திருக்கிறார். மேலும், அரசாங்க வேலை குறித்துப் பேசியபோது, அந்தப் பெண்ணை அமைச்சர் மீண்டும் மிரட்டியதாகவும், தன்னுடைய விருப்பத்தின்படி நடந்துகொள்ளவில்லை என்றால், உன்னையும் உன்னுடைய குடும்பத்தையும் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் சொல்லப்படுகின்றது.
இந்நிலையில், அந்தப் பெண் தன்னுடைய செல்போனில், அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளியுடன் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோ காலில் ஆபாசமாக பேசியது, அறையில் இருவரும் தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோக்கள் ஆகியவற்றை அமைச்சருக்கு அனுப்பி, “சொன்னபடி அரசு வேலை வாங்கித்தரவில்லை என்றால், இந்த வீடியோக்களை வெளியிட்டு, அவமானப்படுத்திவிடுவேன்” எனக் கூறியிருக்கிறார்.
இதனைப் பார்த்து அதிர்ந்துபோன அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி, அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்று குடும்பத்தையே மிரட்டியதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த நிலையில்தான், கர்நாடகாவைச் சேர்ந்த தினேஷ் கல்லஹள்ளி என்ற சமூக ஆர்வலரைச் சந்தித்து அந்தப் பெண் தன்னுடைய பிரச்னைகளை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ், பெங்களூரு காவல்துறை ஆணையரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், அமைச்சர் மீதான புகாரைப் பார்த்த காவல்துறை ஆணையர், “இது எங்களுடைய எல்லைக்குள் வராது. அதனால் கப்பன் பார்க் காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள்” என திருப்பி அனுப்பியுள்ளார்.
பின்னர், கப்பன் பார்க் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தபோது, அங்கே புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இதுவரை அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், “பாதிக்கப்பட்ட பெண்ணையே வந்து நேரில் புகார் கொடுக்க சொல்லுங்கள். அப்போதுதான் நடவடிக்கை எடுப்போம்” என கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், ஆர்.டி.நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பதாக சமூக ஆர்வலர் தினேஷ் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், அமைச்சரின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மூன்று நான்கு நாட்களாக கர்நாடகாவின் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளும் அந்த வீடியோக்களை ஒளிபரப்பு செய்து, அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கின்றன.
பாலியல் புகார் விவகாரம் பூதாகரமானதும், பா.ஜ.க மேலிட தலைவர்கள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளியை ராஜினாமா செய்யச்சொல்லி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன் கிழமையன்று தனது தம்பி பாலச்சந்தரின் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பாவிடம் கொடுத்தார் ரமேஷ். அந்த கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்ததாக முதல்வர் எடியூரப்பாவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய பதவி பறிபோனதற்கு காரணமான அந்தப் பெண்ணையும், சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளியையும் அமைச்சராக இருந்த ரமேஷ் மிரட்டி வருவதாகவும், அதனால், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி கூறியிருக்கிறார்.
ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை பாரதிய ஜனதா ஆட்சியின்போது மூன்று அமைச்சர்கள் சட்டசபைக்குள் ஆபாச வீடியோக்களை பார்த்த விவகாரம் பூதாகரமாகி அவர்களும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சரான ராஜேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோவால் சிக்கி தன் பதவியை இழந்திருப்பது மட்டுமல்லாமல், வேறு ஒரு அமைச்சருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!