India
இந்தியாவில் வெகுவாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் குறைந்து வந்த நிலையில், தெலங்கானா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று சற்று அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்களோடு, மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இவற்றில் மகாராஷ்டிரா அதிக அளவிலான பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த கடும் கண்காணிப்பை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சரவை செயலாளர் வலியுறுத்தினார்.
மேலும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும், பாதிப்புகளை விரைந்து கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும், தடுப்பூசி வழங்குதல் அடுத்த கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!