India

கர்ப்பிணிப் பெண்ணின் உயிரைப் பறித்த மூட நம்பிக்கை : நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

புனேவில் உள்ள ஷிலிம் எனும் பகுதியைச் சேர்ந்தவர் தீபாலி பிட்கர். இவர் 8 மாத கர்ப்பிணி. வரது கணவர் மகேஷ் பிட்கர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10ம் தேதி தீபாலி பிரசவ வலியால் துடித்துள்ளார். அப்போது கணவரும், உறவினர்களும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மூட நம்பிக்கையால் வீட்டிலேயே சில சடங்குகளைச் செய்துள்ளனர்.

அப்போது, தீபாலியின் உறவினர் ஒருவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அவரது கணவரும், பெற்றோரும் தீபாலியின் உடலில் ஆவி புகுந்துவிட்டது. இவளுக்கு, கடவுளால் பேயோட்டப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

பின்னர் தீபாலியின் நிலைமை மோசமடைந்ததை அடுத்து, அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தீபாலி உயிரிழந்தார். மேலும் அவருக்குப் பிறந்த குழந்தையும் உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எவ்வளவோ தொழில்நுட்பங்களும், வசதிகளும் வந்தபோதிலும், மூட நம்பிக்கைகளால் இதுபோன்று நடைபெறும் சம்பவங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்து வருவது வேதனை அளிக்கக்கூடியதாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: மூட நம்பிக்கையின் உச்சம்: மனநிலை பாதிக்கப்பட்டவரை பேய் விரட்டுவதாக அடித்ததில் உயிரிழப்பு - சாமியார் கைது!