India
சாமியார் ராம்தேவின் CORONIL மருந்தை மக்களுக்கு செலுத்த அனுமதி கொடுத்தது யார்? - அதிர்ச்சி கொடுத்த IMA
2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை முடக்கியது. இந்த வைரஸால் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து மக்களைப் பாதுகாப்பதற்காக, பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு தற்போது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் உச்சத்திலிருந்த போது, சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் 'கொரோனில்' என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. அப்போது மருந்துக்கான அறிவியல் ஆதாரங்கள் மீது மருத்துவர்களும்,சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர்.
ஆனால், சாமியார் ராம்தேவ் இவர்களின் கேள்விகளுக்கான அறிவியல் ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, ஆயுஷ் அமைச்சகம் சாமியார் ராம்தேவின் CORONIL மருந்திற்கு ஒப்புதல் கொடுப்பதை நிறுத்தியது. இருப்பினும், கொரோனில் மருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என சாமியாரின் மருந்திற்காகத் துணை நின்றது.
இந்நிலையில், சாமியார் ராம்தேவ் மீண்டும் கொரோனாவை 100 சதம் குணப்படுத்தும் என கூறி CORONIL மருந்தை அறிமுகம் செய்துள்ளார். அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத மருந்தின் அறிமுக விழாவில், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், இந்த மருந்து குறித்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், CORONIL மருந்திற்கு உலக சுகாதார அமைப்பின் தர சான்றிதழ் திட்டத்தின் கீழ் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் ஒப்புதல் பெறப்பட்ட ஒன்று' என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான எந்தவொரு பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனையும் உலக சுகாதார அமைப்பு மதிப்பாய்வு செய்யவோ சான்றளிக்கவோ இல்லை என உலக சுகாதார மைய அமைப்பின் மத்திய மருந்துக் கட்டுப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய, இந்தியன் மெடிக்கல் அசோஷியேசன் (IMA) தலைவர் டாக்டர் ஜெயலால்,“ஒரு நாட்டின் சுகாதார அமைச்சர் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படாத ஒரு மருந்தை கொரோனாவிற்கு எதிரான துணை சிகிச்சை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று எப்படி தவறாகப் பரிந்துரைக்கலாம்? இட்டுக்கட்டப்பட்ட ஒரு மருந்தை இந்திய மக்கள் மீது திணிப்பதா?
ஒரு பொருள் நேர்மையானதா, நல்லதா என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத போது அதை பயன்படுத்த அனுமதியளிப்பது அறம்தானா? ஒரு ஏகபோக கார்பரேட் நிறுவனத்தின் தரம் நிரூபிக்கப்படாத மருந்தை, மார்க்கெட் லாபம் என்ற பெயரில் விற்பனை செய்யலாமா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சாமியார் ராம்தேவின் CORONIL மருந்தை பயன்படுத்த மோடி அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்றும், ஏன் வரிந்துக் கட்டிக் கொண்டு கார்பரேட் சாமியாருக்கு மோடி அரசு துணை நிற்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!