India

“எகிறும் பெட்ரோல் விலை- GST கவுன்சில் தான் முடிவுசெய்ய வேண்டும்” : நிதியமைச்சர் நிர்மலாவின் ‘அடடே’ பதில்!

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. கொரோனாவுக்கு பிறகு கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம், 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பா.ஜ.க அரசின் மக்கள் விரோத திட்டங்களால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்களின் நிதி ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால், மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ரூ.100ஐ கடந்து பெட்ரோல் விலை விற்பனையாகிறது. மேலும் டீசல் விலையும் கிட்டத்தட்ட 100ஐ நெருங்கிவிட்டது. இதனால், தினந்தோறும் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. கடும் விலை உயர்வால், ஒருநாள் வாழ்க்கை நடத்தவே மிகவும் சிரமாக இருப்பாக மக்கள் புலம்பி வருகின்றனர். தற்போது கேஸ் சிலிண்டர் விலையும் உயர்த்துள்ளதால் பொதுமக்கள் மேலும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு முந்தைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ்தான் காரணம் என பிரதமர் மோடி அவர்கள் மீது பழியைச் சுமத்தி வருகிறார். அமைச்சர் நிதின் கட்கரியோ, பெட்ரோல் உலை உயர்ந்து வருவதால் மக்கள் மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும் என அலட்சியமாக தன் கடமையை உணராமல் பேசுகிறார்.

இந்நிலையில் சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது, "பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர ஜி.எஸ்.டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும். நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே. என்னால் மட்டுமே முடிவு செய்ய முடியாது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தான் நிர்ணயம் செய்கின்றன'' எனத் தெரிவித்துள்ளார்.

சாமானிய மக்களை வாட்டி வதைத்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல், பிரதமரும், மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து பொய் பேசி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: “காரில் கொக்கைன் கொண்டு சென்ற வழக்கில் பா.ஜ.க இளைஞரணி பொதுச் செயலாளர் கைது” : மே.வங்க போலிஸார் அதிரடி !