India
“பசு சாணம் சர்வரோக நிவாரணியாம்”: அறிவியலுக்கு புறம்பாக ‘பசு அறிவியல்’ பாடத்திட்டத்தை வெளியிட்ட மோடி அரசு!
பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து இந்துத்வா கும்பலின் அராஜகமும் அதிகரித்துள்ளது. கடந்த கால ஆட்சியின் போதே மாட்டுக்கறி உண்ணவர்களையும், மாடுகளை ஏற்றிச்சென்ற வடமாநிலங்களில் மக்களையும் அடித்து துன்புறுத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக, தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்து மக்களிடம் ஆதரவை பெறுவதற்காக பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஆளும் பா.ஜ.க அரசு பசுக்களை பாதுகாக்க அமைச்சகம் உருவாக்குவது போன்ற வேலைகளை செய்துவருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரமுடியாமல் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்ததால், குடும்பத்தை நடத்த முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை அன்றாடம் சந்திக்கின்றனர்.
இத்தகைய சூழலில், பசுக்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது, மாடுகள் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என நாடு முழுவதும் பிப்.25-ம் தேதி 'பசு அறிவியல்' என்ற பெயரில் தேர்வு ஒன்றை நடத்தவிருகிறது மோடி அரசு.
இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் பசுவின் பெயரில் பல்வேறு கட்டுக்கதைகளை மோடி அரசின் ஆதரவாளர்கள் கூறிவந்த நிலையில், அந்த கட்டுக்கதைகளை மையமாக வைத்து, தற்போது தேர்வு நடந்த முடிவு எடுத்திருக்கிறது மோடி அரசின் பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகம்.
மோடி அரசால் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் (தேசிய பசு ஆணையம்) சார்பில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வலியுறுத்த வேண்டும் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தேர்வுக்கான படத்திட்டத்தை பால் மற்றும் கால்நடைத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பசு ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், முற்றிலும் அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் படத்திட்டம் அமைந்துள்ளது.
குறிப்பாக, அந்த பாடத்திட்டத்தில், மாட்டுச் சாணமும் அதன் கோமியமும் கொரோனா தொற்றிலிருந்து 800 பேரை குணப்படுத்தியிருக்கிறது; மாடுகள் கொல்லப்படுவதால் பூமி அதிர்வு ஏற்படுகிறது.
போபால் விஷவாயு தாக்குதலின் போது மாட்டுச்சாணம் பூசப்பட்ட வீடுகளில் இருந்தவர்களை மாட்டுச்சாணம் விஷவாயுவை முறியடித்து பாதுகாத்தது; மாட்டின் பால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் அதில் தங்கத்தின் துகள்கள் கலந்திருக்கின்றன; மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருக்கும் 5 டிரில்லியன் பொருளாதாரத்தில் மாடு முக்கிய பங்காற்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பசுவில் இருந்து கிடைக்கும் சாணம், கோமியம் உள்ளிட்ட 5 பொருட்கள் புனிதமானவை; இவை இதயத்திற்கு மருந்தாகும். ரத்தத்தை சுத்திகரித்து, வாத, பித்த கப தோஷங்களை சமநிலைப்படுத்தும். எல்லா நோய்களையும் குணப்படுத்தும். பசுவின் சாணத்தில் செல்வம் அளிக்கக்கூடிய மகாலட்சுமி உறைகிறாள்” என்றெல்லாம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் பசுவின் நிறத்திற்கேற்ப அதன் சாணத்தின் மருத்துவ குணமும் மாறும். சொரியாசிஸ் முதல் பக்க வாதம் வரை அனைத்து வியாதிகளையும் இந்த சாணம் சரி செய்து விடும் என இருக்கிறது. இதில் மற்றொரு கொடுமையாக மோடி அரசு நடத்தும் இந்த தேர்வை, 24 நாடுகளிலிருந்து பலரும் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உலக நாடுகள் பலவும் பால் வளத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனால் மோடி அரசோ, தனது இந்துத்வா அரசியலை அப்பட்டமாக முன்வைத்து, சிறுபான்மையினரையும், தலித் மக்களையும் குறி வைத்து தனிமைப்படுத்த முற்படுகிறது. பா.ஜ.க இத்தகைய முயற்சிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!