India
“விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்காத மோடியை தமிழகம் வர அனுமதிக்க மாட்டோம்” - பி.ஆர்.பாண்டியன் பேட்டி!
பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், பா.ஜ.க அரசு விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்காமல் அவர்களை வஞ்சித்து வருகிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் இருக்கும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட பாரதிய கிசான் யூனியன் என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 30 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது பேட்டியளித்த தமிமுன் அன்சாரி, விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் 70 நாட்களாக போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பி.ஆர்.பாண்டியன், “70 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெற மறுக்கிறது. பிரதமர் மோடி தமிழகத்துக்குள் நுழைவதைத் தடுப்போம். விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்காத மோடியை தமிழக விவசாயிகள் தமிழகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!