India

’விவசாயிகள் போராட்டத்தை அடக்க நினைக்கும் டெல்லி அரசுக்கு காலம் பதில் சொல்லும் நேரம் விரைவில் வரும்’

சட்டங்கள் மூலமும் அடக்குமுறை மூலமும் மிரட்டி விவசாயிகளை அடக்கிவிடலாம் என நினைத்தால் டெல்லிக்கு நாடு பதில் சொல்லும் என நம்புங்கள் என்ற தலைப்பில் தினகரன் நாளிதழ் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.இது குறித்து தின கரன் தனது 4.2.2021 தேதிய இதழில் வெளியிட்டுள்ள தலையங்கம் வருமாறு:-

மத்திய வேளாண் சட் டம்2020 செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உடனடியாக சட்டமாக்கப்பட்டதில் இருந்து தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்று வரை முடிவுக்கு வரவில்லை.

டெல்லியை முற்றுகையிட்டு கிட்டத்தட்ட 2 முதல் 3 லட்சம் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடும் பனி கொட்டியது, திடீர் மழை பெய்தது. அசரவில்லை அவர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உறுதியுடன் போராடுகிறார்கள்.

வேளாண் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து இன்று வரை 7 பேர் தற்கொலை உள்பட 159 விவசாயிகள் இதற்காக உயிர் துறந்து இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் மாதக் கணக்கில் குடும்பத்தைவிட்டு, விவசாயத்தை விட்டுநடுரோட்டில் பகலும், இரவும்போராடி வருகிறார்கள்.

குடியரசு தின டிராக்டர் பேரணி வன்முறைக்குப் பிறகும் இன்னும் வலுகொண்டு பரவுவதும், சர்வதேச பிரபலங்கள் ஆதரவு விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்து இருப்பதும் தற்போது, மத்திய அரசுக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ட்விட்டருக்கு உத்தரவு போடும் அளவுக்கு ஜனநாயகக் கருத்துக்களை முடக்க நினைப்பதும், ஜனவரி 26 வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டியலை வெளியிடாமல், அவர்களை முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், அவர்கள் பற்றியதகவலை வெளிப்படுத்தாமல் இருப்பதை எல்லாம் பார்க்கும் போதும் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் இணையதள சேவை துண்டிக்கப்பட்டு இருப்பதும், விவசாயிகளுக்கு ஆதரவான ட்விட்டர் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி இருப்பதும், இன்னும் ஒருபடி மேலே சென்று ட்விட்டர் நிறுவனத்தையே மறைமுகமாக மிரட்டுவதையும் பார்க்கும் போதும் நம்புங்கள் இது, ஜனநாயக ஆட்சிதான் என்று அந்த அளவுக்கு கருத்துச் சுதந்திரம் சிதைக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசுக்கு எதிராக இந்தியாவில் யார் கருத்துக் கூறினாலும் அவர்கள் பிரிவினைவாதிகளாக, தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். இப்போது வெளிநாட்டினர் முறை, அதனால், வெளிநாட்டினர் கருத்துத் தெரிவிக்கும் ட்விட்டருக்கு நெருக்கடி வந்து இருக்கிறது. அப்படித் தான் இதைபார்க்க வேண்டி இருக்கிறது.

இல்லாவிட்டால் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ள டெல்லி எல்லைப் பகுதிகளில் சாலைகளை தோண்டியும், இரும்பு வேலிகள், முள்வேலிகளை அமைத்தும்,காங்கிரீட் தடுப்புச் சுவர்அமைத்தும் சொந்த நாட்டுமக்களை திறந்த வெளிசிறைக்கூடமாக மாற்றநினைக்கும் அரசை என்னவென்று சொல்வீர்கள்?

சத்தியாகிரகம், அகிம்சையை உலகத்திற்கே போதித்த நாடு இந்தியா.பதிலுக்குப் பதில் வன்முறை இல்லாமல் சத்தியா கிரகம் மூலம் விடுதலை பெற்றநாடும் இந்தியா மட்டும்தான்.இதற்காக இன்றுவரை உலகநாடு கள் போற்றும் உத்தமர்மகாத்மா காந்தி பிறந்ததும் குஜராத் தான். நமது நாட்டுமக்களை, நமது விவசாயிகளை சட்டங்கள் மூலமும், அடக்கு முறை மூலமும் அடக்கி விடலாம், மிரட்டிவிடலாம் என்று நினைத்தால் டெல்லிக்கு நாடு விரைவில் பதில் சொல்லும் காலம் வரும்.

Also Read: எழுவர் விடுதலை: பல்டி அடித்த மத்திய அரசு; கைவிரித்த ஆளுநர்.. நாடகமாடும் அதிமுக - மு.க.ஸ்டாலின் கேள்வி!