India
அரசுக்கே படியளந்த பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்த்த மத்திய மோடி அரசு!
நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் வகையில் அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார் மயமாக்களை ஊக்குவித்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் அவ்வாறே பிரதிபலித்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக, மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் துரைப்பாண்டியன் தினகரன் நாழிதலில் கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், “எல்.ஐ.சி துவங்கப்பட்டபோது மூலதனம் வெறும் ரூ.5 கோடி. கடந்த 2000ல் அரசாங்கத்தின் மூலதனம் ரூ.100 கோடியாக ஆக்கிவிட்டனர். எல்.ஐ.சி ரூ.25 ஆயிரம் கோடியை ஈவுத்தொகையாக கொடுத்துள்ளது. அதாவது லாபத்தில் பங்காக எல்.ஐ.சி.க்கு கொடுத்துள்ளது.
எல்.ஐ.சி மத்திய அரசுக்கு கொடுத்துள்ள கடன் ரூ.10 லட்சத்து 34 ஆயிரத்து 828 கோடி, மாநில அரசுகளுக்கு ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 251 கோடி கொடுத்துள்ளது. எல்.ஐ.சி. பல நிறுவனங்களில் முதலீடு செய்தது மட்டும் ரூ.29 லட்சம் கோடி. அதுமட்டுமல்லாமல் சாலை, மின்சாரம், வீடுகட்ட, குடிநீர் உதவிக்கு கொடுத்த பணம் ரூ.50 ஆயிரம் கோடி. அவர்களிடம் உள்ள பாலிசி மதிப்பு ரூ.45 லட்சம் கோடியாக உள்ளது. இந்த எல்.ஐ.சி. நிறுவனம் பணம் காய்க்கும் மரம். மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் பணம் தேவையோ அப்போதெல்லாம் எல்.ஐ.சி. தான் பணத்தை கொடுத்துள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனத்தில் 3 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளனர். கம்பெனிகள் விதிகளின் படி யார் அதிகமாக பங்கு வாங்குகிறார்களோ அவர்கள் உரிமையாளர்களாக இருக்க முடியும். பல வெளிநாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 49 சதவீதம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால்.உள்நாட்டு பெரிய நிறுவனம் 79 சதவீதம் பிசினஸ் வைத்திருப்பது எல்.ஐ.சி. தான். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு வந்தாலும் எல்.ஐ.சி.யை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், தற்போது, பொதுத்துறை நிறுவன பங்குகளை 74 சதவீதம் விற்கலாம் என்று முடிவு செய்துள்ளது மத்திய மோடி அரசு.
மக்களிடம் வாங்கிய பணத்தை எல்.ஐ.சி. மக்களுக்கே செலவு செய்கிறது. இப்படி 74 சதவீத பங்குகளை விற்றால் அவர்கள் மக்களுக்கு, செலவு செய்யவிடுவார்களா என்பது தெரியவில்லை. மத்திய அரசு பெரிய முதலாளிகளிடம் பொதுத்துறை நிறுவனங்களை ஒப்படைக்க துடிக்கிறது.
நஷ்டம் ஈட்டினால் மூடி விடு, லாபம். ஈட்டினால் விற்றுவிடு என்பதுதான் பா.ஜ.வின் கொள்கையாக உள்ளது. அதிகமாக வரி கொடுப்பது பொதுத்துறை நிறுவனம் தான். கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லை. ரயில்வே நிர்வாகம் நஷ்டத்தில் இயக்கப்படுவதாக கூறி வருகின்றனர். பயணிகள் ரயில் இயக்குவதில் நஷ்டம் என்றால், உண்மைதான். 46 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
ஆனால், சரக்கு ரயில் இயக்குவதில் லாபம் ரூ.46 ஆயிரம் கோடி. அப்போது லாபம் என்றால் பாசஞ்சர் கட்டணத்தில் செலவு செய்கிறோம். இதில், நஷ்டம் என்று எப்படி கூற முடியும். ரயில்வே நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காமல் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைக்கின்றனர்.
தொழிற்சாலைகளுக்கு சமூக பார்வை உள்ளது. இதை ஏன் பா.ஜ.க வேகமாக கொண்டு வருகிறார்கள் என்றால் இட ஒதுக்கீட்டில் நம்பிக்கை கிடையாது. எனவே. பொதுத்துறை நிறுவனம் இருந்தது என்றால் இட ஒதுக்கீட்டில்அனைத்து சமூகத்துக்கும் தரவேண்டும்.
தனியார் மயமாகும் என்றால் இட ஒதுக்கீடு கிடையாது. சமூக நீதி கோட்பாடு இல்லாமல் போய்விடும். மும்பை - அகமதாபாத், டெல்லி - லக்னோ ஆகிய இடங்களுக்கு, தனியாரால் ரயில்கள் இயக்கப்பட்டன. இப்போது அந்த ரயில்களை இயக்க முடியவில்லை. கட்டண உயர்வை அதிகப்படுத்தியும் ஓட்ட முடியாமல் நிறுத்திவிட்டனர். டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ ரயிலை ரிலையன்ஸ் நிறுவனம் இயக்கியது.
ஆனால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி அந்த ரயிலை நிறுத்திவிட்டனர். அந்த ரயிலை ரயில்வே நிர்வாகம் நடத்தியது. இப்போது லாபத்துக்கு ஓட்டி வருகின்றனர். இவர்களின் உண்மையான முகம் என்ன என்பது தற்போது தெரியவருகிறது.
காவி என்பது, ஏமாற்று வேஷம். மக்களிடம் ஓட்டு வாங்க மெஜாரிட்டி மதத்தில் ஓட்டு வாங்குவதற்காக ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர். கார்ப்பரேட் என்பதுதான் அவர்களின் உண்மையான முகம். லாபம் தரும் எண்ணெய் நிறுவனங்களை ஏன் விற்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மோடி அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம். தோல்வியடைந்த பிரதமர் ஜி.எஸ்.டி. கொண்டு வந்ததால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதிலும் தோல்வி. தற்போது பொதுத்துறைகளை விற்பது தான். இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா டாட்டாவிடம் தான் நாட்டுடைமையாக்கினோம்.
தற்போது அதே டாட்டாவிற்கு, விற்க போகிறோம். வரியாக முதலீடாக, சலுகையாக பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செலவு செய்தனர். இது தனியாருக்கு போனால் நமக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை. பொருளாதாரம் தொடர்பாக தனியார் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் 39 சதவீதம் தனியார் நிறுவனங்கள் வருமானத்தை உயர்த்தியுள்ளனர்.
இது, எப்படி நடந்தது. யாருடைய ஆதரவுடன் நடந்தது. என்று தெரியவில்லை. ஆக்ஸ்பார்ம் அறிக்கையில், முகேஷ் அம்பானி சொத்து மட்டும் 78 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.90 கோடி சம்பாதித்துள்ளார். ரூ.3 ஆயிரம் மாதம் சம்பாதிக்க தொழிலாளி கஷ்டப்படுகிறார்.ஆனால், முதலாளிகள் கோடிகளை குவிக்கின்றனர்.
பெரிய முதலாளிகளின் சொத்து வரியை நீக்கியுள்ளனர். அவர்கள் மீது சொத்து வரிபோட்டால் ரூ.1 லட்சம் கோடி வருவாய் வரும்.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு. கொரோனா வரி போட்டிருக்கலாம். மாறாக, பெட்ரோல் மீதும். டீசல் மீதும் வரி போட்டுள்ளனர். விவசாயத்துக்கான வரி போட்டுள்ளனர்.
உரத்துக்கு மானியம் ரூ.60 ஆயிரம் கோடி குறைத்து விட்டு மீண்டும் வரி போடுகிறார்கள். இது, எந்த. விதத்தில் நியாயம். இந்த அரசாங்கம் யாருடைய அரசாங்கம் என்று தெரியவில்லை. இந்தியாவை கார்ப்பரேட் கொள்ளை நாடாக பா.ஜ. அரசு மாற்றி விட்டது. ஒரு பக்கம் மானியத்துக்கான ஒதுக்கீட்டை குறைத்து வருகின்றனர். பெட்ரோல். டீசல் மூலம் ரூ.2.45 லட்சம் கோடி வருவாய் சம்பாதித்துள்ளனர். இது போக பங்குகளை விற்றுவருவாய் திரட்டுகின்றனர்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - முரசொலி, தினகரன்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!