India

LIVE - #UnionBudget2021 : முற்றிலும் தனியார் மயமாகிறது IDBI - இந்தியாவை தனியாருக்கு விற்கும் பட்ஜெட்!

தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும்.

மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலகு.

வீட்டு கடன் கட்ட வரும் 31 மார்ச் 2022 வரை நீட்டிக்கப்படுகிறது.

16.5 லட்ச கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு.

மொபைல் மற்றும் மொபைல் உதிரி பாகங்களுக்கு ஏற்றுமதி வரி குறைக்கப்படும்.

Updated at: February 01, 2021 at 1:25 PM

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை!

எல்.ஐ.சி மற்றும் ஐ.பி.ஓ வெளியீட்டிற்கான பணிகள் இந்த ஆண்டில் முழுமையாக நிறைவடையும். நிலுவையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் விரைவில் செயல்படுத்தப்படும்.

அதேப்போல், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும்.

Updated at: February 01, 2021 at 1:25 PM

ரயில்வே துறைக்கு 1.10 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

ரயில்வே துறைக்கு 1,10,055 கோடி ரூபாய் ஒதுக்கீடு. அதில் ரூ .1,07,100 கோடி மூலதன செலவினங்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும் என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

Updated at: February 01, 2021 at 1:25 PM

மின் உற்பத்தி மற்றும் விநியோகிக்கும் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக ரூ.3 லட்சம் கோடியில் புதிய திட்டம்.

2023-ம் ஆண்டுக்குள் அனைத்து வழித் தடங்களும் மின்மயமாக்கப்படும். மக்கள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கம்.

Updated at: February 01, 2021 at 1:25 PM

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

மத்திய அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களை தனியாருக்கு வழங்கி பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதில், சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் பணமாக்கல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Updated at: February 01, 2021 at 1:25 PM

மத்திய பட்ஜெட் தாக்கலில், சுகாதாரத் துறைக்கு ரூ.2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. இதில் 17,000 கிராமப்புற மற்றும் 11,000 நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு!

Updated at: February 01, 2021 at 12:03 PM

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் நிர்மலா சீதாராமன்

Updated at: February 01, 2021 at 11:44 AM

பட்ஜெட் தாக்கலின் போது எதிர்கட்சி எம்.பிக்கள் கோஷம்!

Updated at: February 01, 2021 at 11:44 AM

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

Updated at: February 01, 2021 at 11:44 AM

2021-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

Updated at: February 01, 2021 at 11:44 AM